பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露蟾 வல்லிக்கண்ணன்

மங்கை பத்திரிகை மலரில் என் படைப்புகளில் நான் விரும்பும் பெண்பாத்திரம் என்றொரு கட்டுரை வர இருப்பதும் மகிழ்ச்சி தருகிறது. அலை ஒசை நாகமணி மலர்களுக்கும் கதைகள் எழுதிக் கொடுத்திருப்பிர்கள் என்று எண்ணுகிறேன்.

நான் இங்கே வந்த பிறகு தினமணிகதிர்', 'அலைஓசை', செளராஷ்டிரமணி நாகமணி தீபாவளி மலர்களுக்குக் கதைகள் அனுப்பியிருக்கிறேன்.

செளராஷ்டிரமணி என்பது கும்பகோணத்திலிருந்து வருகிறது. போன வருஷம் வெள்ளி விழா கொண்டாடியது. இது வருஷம் தோறும் தீபாவளி மலர், பொங்கல்மலர் வெளியிடும். பல வருஷங்களாக அவற்றில் நான் எழுதிவருகிறேன்.

'திட்டம்' பத்திரிகைக்காக வ.ரா.பற்றிய கட்டுரை எழுதிவிட்டேன். கு. அழகிரிசாமி பற்றியும் எழுதி, சேர்த்து அனுப்பலாமே என்றிருந்ததால், தாமதம் ஏற்பட்டுவிட்டது.

அ, இ, எழுத்தாளர் மாநாடு பற்றிய தகவலுக்கு நன்றி. மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது சென்னைக்கு வரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு சங்கத்தை ஆரம்பித்தார்கள். இந்திராகாந்தி பிரதமர் ஆகி சென்னை வருவதைப் பயன்படுத்தி, ஒரு

தோடு நடத்திவிட்டார்கள்.

எழுத்தாளர்கள் அரசியல் பெரியவர்கள் புகழ் வெளிச்சத்தில் மயங்கி, அவர்களது விளம்பரப் பெருமையை பயன்படுத்திக்கொண்டு தாங்களும் இரவல்புகழ் அடைய ஆசைப்படுவது அவர்களுடைய அடிமைப் புத்தியைத்தான் காட்டுகிறது. டொமினிக் ஜீவா, சிவத்தம்பி போன்ற எழுத்தாளர்கள் இங்கே வருகிற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இந்தச் சங்கம் அவர்களை கவுரவிக்க எப்பவாவது விரும்பியது உண்டா? அ,இ.எசங்கம், அதன் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் என்று சொல்லிக்கொண்டு, அரசியல்வாதிகளின் தயவோடு, அவர்கள் ஏதேனும் சலுகைகள் அடைய வாய்ப்பும், வசதியும் கிட்டக்கூடும். சாதாரண எழுத்தாளனுக்கு இத்தகைய சங்கங்களினால் எவ்விதமான பயனும் ஏற்படுவதில்லை.

உங்கள் டால்ஸ்டாய் நாடகம் பெங்களுரில் மேடையேற இருப்பதை அறிய சந்தோஷம்.

நாவல் எழுத ஆரம்பியுங்கள், வெற்றி நிச்சயம் வந்து சேரும்.

இந்தப் பக்கத்தில் இப்போது தொடர்ந்து மழை பெய்கிறது. ஆனால் மேற்கே, அணைக்கட்டுப் பகுதியில், பலத்த மழை இல்லை என்றே தெரிகிறது. ஆற்றில் சிறிதளவே தண்ணிர் போகிறது.