பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வல்லிக்கண்ணன்

எழிலமுதன்

சென்னை-14

27–1–83

பிரிய நண்ப, வணக்கம். உங்கள் 2:1-83 கடிதம். மகிழ்ச்சி. நீங்கள் புதுமைப்பித்தன் பற்றி திருநெல்வேலி வானொலியில் உரை நிகழ்த்தியதை அறிய சந்தோஷம்

'தீபம் பொறுப்பாசிரியராக இல்லை நான். இடைக்காலத்தில் சில மாதங்கள் ஆசிரியர் குழு என்று மூவரில் ஒருவனாய் என் பெயரும் அச்சிடப்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் கூட தீபம்' பத்திரிகையில் பொறுப்பு எதுவும் எனக்கு இருந்ததில்லை. கதை, கட்டுரை, தேர்ந்தெடுப்பது, பிரசுரிப்பது, அல்லது பிரசுரிக்காமலே வைத்திருப்பது எல்லாம் எஸ். திருமலையின் பொறுப்பு தான். இவர் நா.பாவின் உறவினர். தா.பா. மேற்பார்வையும் உண்டு.

'தீபம் வந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அது வருவது தெரியாமலே உயிர் வாழ்கிறது. ஸ்ர்குலேஷன் மிகமிகக் குறைவு.

திருவாதிரை நாளில் நீங்கள் செப்பறைக்கும், ராஜவல்லிபுரம், சீவலப்பேரிக்கும் போயிருந்ததை அறிய மகிழ்ச்சி.

பாரதி பிறந்த இடம் பற்றி நீங்கள் குறித்திருக்கிற அளவுக்குத் தான் எனக்கும் தெரியும். வேறு விவரம் தெரியாது.

1982ல் எட்டயபுரத்தில் பாரதி விழா கொண்டாடப்பட்ட சமயம், விழிகள் என்ற சிறு பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது. எட்டயபுரத்தில் பலபேரை பேட்டி கண்டு எழுதப்பட்டிருந்தது. அதில், பாரதி எட்டயபுரத்தில் பிறந்த வீடு என்று காட்டப்படுவது உண்மையில் பாரதி பிறந்த வீடு அல்ல; இது அவர் மாமா வீடு. இந்த வீட்டுக்கு சிறிது தள்ளி உள்ள ஒரு வீட்டில் பாரதி பிறந்தார் என்று எட்டயபுரம் நபர் ஒருவர் சொன்னதாக எழுதப்பட்டிருந்தது. கோபால்ஜி சொற்பொழிவாளர்) பாரதி எட்டயபுரத்தில் பிறக்கவில்லை, சீவலப்பேசியில் தான் பிறந்தார் என்று சொன்னதாக ஒரு பத்திரிகைத் துணுக்கு பார்த்தேன்.

இதுக்கெல்லாம் எவரும், ஆதாரம் என்று எதையும் காட்ட முடியவில்லை. -

ஆதாரம் எதுவும் இல்லை என்பதுதான் காரணம்.

இச்சர்ச்சைகளினால் உருப்படியான பயன் ஏதாவது உண்டா