பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வல்விக்கன்னன்

நண்பர் ஜெயபால் நலம் தானே? அவருக்கு என் அன்பு வணக்கம்.

ஜெயடேவி போனவாரம் சென்னை வந்து நாலைந்து நாட்கள் தங்கி, பலரையும் பார்த்து விட்டுப் போனார். உங்களை நாகர்கோவிலி ல் கண்டு பேசியது பற்றியும் சொன்னார்.

sojóðsi

ଈj. 3.

சென்னை.

f{}-12–87 அன்பு மிக்க நண்பர், வணக்கம். நவம்பர் 25லிருந்து நான் சென்னையில் இல்லை. புதுடில்லி போயிருந்தேன். டிச. 3ம் தேதிதான் உங்கள் கடிதத்தைப் பார்த்தேன்.

உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாயும் மகளும் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். என் வாழ்த்துக்கள்.

புதுடில்வியில் சாகித்திய அகாடமி நவ.28-29 தேதிகளில் புதுமைப்பித்தன் நினைவுக்கருத்தரங்கு கூட்டியது. 25 மாலை ”கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரசில் போனேன். அசோகமித்திரனும், "சாயாவனம் சா. சந்தசாமியும் அதே ரயிலில் வந்தார்கள். 27 காலை டில்லி சேர்ந்தோம்.

28ல் வலம்புரிஜான் தலைமையில், க.நா.சு. சிறப்புரை(இங்கிலீஷ்). நான் சாகித்திய அகாடமிக்காக எழுதிய புதுமைப்பித்தன் புத்தகம் அங்கு வெளியிடப்பட்டது. முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு, ஜான் இங்கிலீஷில் அருமையான சொற்பொழிவு நிகழ்த்தினார். அசோகமித்திரன், வெங்கட்சாமிநாதன் இங்கிலீஷில் கட்டுரை படித்தார்கள். பிற்பகலில், நான் தமிழில் புதுமைப்பித்தன் விமர்சனக் கொள்கைகள் பற்றி கட்டுரை வாசித்தேன். சி.ரவீந்திரன் பு.பி. கவிதைகள் பற்றி இங்கிலீஷில். சா. கந்தசாமி தமிழில்.

பல மொழிகளின் வாசகர்களும் வந்திருந்தார்கள். இரண்டாம் நாள், எனது தலைமையில், க.நா.சு, பு:பி. பற்றிப் பேசிய பிறகு, டில்லி ரசிகர்கள் பலர் அவரவர் எண்ணங்களை தமிழிலும் இங்கிலீஷிலும் வெளியிட்டார்கள்.

கருத்தரங்கு சிறப்பாக நடந்தது. ஒரு தமிழ் எழுத்தாளருக்கு,