பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ8 வல்லிக்கன்னன்

துங்கி சுகம் பெறுவதே அருமையான ஆனந்தம் என்று மனம் ஒரு மிதப்பிலே சொக்கிக் கிடந்தது!

சி.சு. செல்லப்பாவை போற்றிட் புகழ வேண்டும். வியந்து துதி பாடலாம் 74 வயசிலும் விடாது ஏதாவது பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும் எனும் துடிப்பு இருக்கிறது அவருக்கு சென்னையில் தங்கி, அலைந்து நிதி வசூல் பண்ணி, வத்தலக்குண்டில் மே 17ல் பி.எஸ். ராமையா நினைவு நாளை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்து முடித்தார்.

ராமையா வளர்ந்த வீடு' என்று ஒரு வீட்டில் கல் பதித்து, அதை நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் திறந்து வைத்துப் பேசினார். பி.எஸ். ராமையா படத்தை நா.பா. திறந்து வைத்தார். பேசினார். மற்றும் சிட்டி, வ.க. கோமதி சாமிநாதன், கோமல்சுவாமிநாதன், தி.க.சி, டி. செல்வராஜ், எஸ்.வி.எஸ். பேசினார்கள். விழா இனிது நிகழ்ந்தது. கல்யாண வீட்டு விருந்தை நினைவுபடுத்தும் சாப்பாடு உண்டு.

விழாவுக்குப் பிறகு, 18லும் நான் வத்தலக்குண்டில் இருந்தேன் பிறகு ஒரு வாரம் திண்டுகல்லில், கமலவேலன் வீட்டில் பள்ளி ஆசிரியர் கதைகள் எழுதுவார். நல்ல நண்பர்.

வெயில் மிக்க கடுமைதான். செல்லப்பா திரும்பவும் சென்னை வந்துவிட்டார். இனி இங்கேயே தங்கி, சுவை என்றொரு காலாண்டு ஏடு நடத்துவதில் தீவிர எண்ணம் கொண்டிருக்கிறார்.

நா. பா. ஃபாரின் டூர் போய்விட்டார். மேற்கு ஜெர்மனி, மற்றும் பல நகரங்கள், நாடுகள் சுற்றி விட்டு, துபாய் போய், ஜூலை கடைசியில் சென்னை திரும்புவார்.

ஏப்ரல் இறுதியில் கெளகாத்தி பாக்கியமுத்து தமிழ்நாடு வந்து போனார். நானும் தி.க.சி.யும் அவரை கண்டு பேசினோம். அவர் புதுடில்லி வந்த சமயம், உங்களுடைய பாரதி நாடகத்தை படித்ததாகவும், ரொம்ப நன்றாக அதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்றும் சொன்னார்.

வெளியூர் நண்பர்கள் அவ்வப்போது சென்னை வந்து போகிறார்கள். என்னை அவர்களோ, அவர்களை நானோ பார்ப்பதில்லை. அவர்கள் உலகம் வேறு. சுயம்பிரகாசச் சொள்ளமுத்து ஆன என்னுடைய உலகம் வேறு. எனது உலகம் ரொம்பக் குறுகியது. அதைக் கூட நான், ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல, ஒரு சவாசன வட்டத்துக்குள் குறுக்கி விடுவதில் ஆர்வம் உடையவனாக இருக்கிறேன். .