பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வல்லிக்கன்னன்

சென்னை.

2アーズ-97

அன்பு மிக்க இராமலிங்கம், வணக்கம். நவம் தானே? - 12-14 தேதிகளில் ஜீரண சக்தி பாதிப்பினால் சோர்வு மிகுதியாக இருந்ததால், முன்றில் கருத்தரங்கில் முழுமையாக ஈடுபட முடியாமல் போய்விட்டது. உங்கள் சந்திப்பு மகிழ்ச்சி தந்தது. சில நாட்களிலே உடல்நிலை சரியாகி விட்டது.

நீங்களும் வேர்கள் நண்பர்களும் என் எழுத்துக்களை புத்தகமாக உருவாக்குவதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டிருப்பது உளம் நெகிழச் செய்கிறது. சந்தோஷம். நன்றி.

கதைகள், கட்டுரைகள் தொகுத்துவிட்டேன். அருமையான விஷயங்கள். கவிதைகள் எடுக்க வேண்டும். இரண்டொரு தினங்களில் சேகரித்துவிடலாம்.

நீங்கள் உங்களுக்கு வசதிப்படுகிற நாளில் இங்கு வரலாம்.

நானே அவற்றை கொண்டு வந்து தரலாம் தான். நான் நெய்வேலி வந்தும் பல வருடங்கள் (5) ஆகிவிட்டன. வரவேண்டும். இன்னும் ஒரு மாசத்துக்கு அது சாத்தியம் இல்லை.

அண்ணன் மகன் பெரியவன் - சுப்ரமணியன் - காலேஜில் சேருவதே பெரும் பிரச்னையாக இருக்கிறது. தினசரி ஏதாவது ஒரு சாலேஜுக்கு போய் காத்திருப்பதே சில நாட்களாக முக்கிய வேலை ஆகிவிட்டது. இல்லை - கிடையாது' என்று திட்டமாகச் சொல்வதுமில்லை. வெயிட் பண்ணுங்க வெயிட் பண்ணுங்க என்று மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து, அப்புறம் சனிக்கிழமை வாங்க - திங்கள் கிழமை வாங்க என்று காலத்தை ஏலத்தில் விடுவதே கல்லூரிகளின் மரபாக இருக்கிறது. மிகப் பல மாணவர்கள் - பெற்றோர் காலம் இந்த ரீதியில் வீணாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இது தீர்ந்துவிடும்.

வேறு சில அலுவல்களும். சிறப்பு மலர் முழுமையும் படித்துவிட்டேன். நல்ல கட்டுரைகள். ஆழ்ந்து படித்தவர்களின் ஆய்வுகள். தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல் ஒன்று. நல்ல, அருமையான, தயாரிப்பு. எல்லாமும் தாஸ்தயேவ்ஸ்கியை ஓரளவு அறிந்தவர்களுக்கு சிந்திக்க தூண்டும் அறிவு விருந்தாக அமைந்துள்ளன. பொதுப்படையான ஒரு கட்டுரை - தா.யின் அனைத்து நாவல்களையும் பொதுவான முறையில் அறிமுகம் செய்கிற ஒரு கட்டுரை இருந்தால் புதிதாகத் தெரிந்து கொள்ள முயல்கிற