பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 83

பற்றித் தெரிந்து கொள்ளப் பெரிதும் உதவும். உங்களுக்கும், கோணங்கிக்கும், வேர்கள் நண்பர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

என் கதைகள், கட்டுரைகளைப் படித்து தேர்வு செய்யும் வேலையை கவனித்துவருகிறேன். நீங்களும் நண்பர்களும் விரும்புவது போல், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் கொண்ட தொகுப்பாகவே

வெளியிடலாம்.

நண்பர் திருமலை 1-ம் தேதி வந்தார். நீங்கள் அவருக்குக் கடிதம் எழுதியிருப்பது பற்றிச் சொன்னார். வெறும் கட்டுரைகளை மட்டுமே தொகுத்து வெளியிடுவது உசிதமாக இருக்கும் என்பது அவர் அபிப்பிராயம். உங்களுக்கும். எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். ('ஆனந்த விகடன் வேலை ஒன்றரை வருடப் பணி - ஜூன் இறுதியுடன் முடிந்து விட்டது அவருக்கு இனி பணி தேவையில்லை என்று நிர்வாகம் கூறிவிட்டது.)

நானும் அண்ணா குடும்பத்தினரும் நலம். பெரிய பையன் சுப்ரமணியன் +2ல், 1200க்கு 1057 மார்க்குகள் பெற்று பாஸ் பண்ணியிருக்கிறான். அதனாலேயே காலேஜ்களில் இடம் கிடைக்கவில்லை 80%க்கு மேல் மார்க்குகள் வாங்கியுள்ள மாணவர்களுக்கு காலேஜ்களில் இடம் கொடுப்பதில்லை என்று பிரின்ஸ்பால்கள் உறுதியாக இருக்கிறார்கள். உயர் மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஆர்ட்ஸ் காலேஜ்களில் சேர்ந்துவிட்டு, பிறகு என்ஜினிரிங், மெடிக்கல் ஆகிய புரபஷனல் கோர்ஸ் காலேஜ்களுக்குப் போய்விடுகிறார்கள்: அதனால் நிர்வாக சிரமம் ஏற்படுகிறது என்பது அவர்கள் வாதம். லயோலா, நியூகாலேஜ், விவேகானந்தா, பிரசிடென்சி, ஜெயின் "க்ாலேஜ்களுக்கு அப்ளை பண்ணியும், ஒரு கல்லூரியிலும் இடம் கிடைப்பதாயில்லை.

சின்னவன் கணேசன் 10 பாஸ் பண்ணிவிட்டான். நல்ல மார்க்குகள் தான். +1ல் சேர வேண்டும். இதுக்கும் அலைச்சலும் சிரமங்களும். ராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூல் போன்றவற்றில் சேர்ந்தால், சம்பளம் குறைவாக இருக்கும் என முயன்றும் பயனில்லை. முடிவாக, கில் ஆதர்ஷ் ஹையர் செகண்டரி ஸ்கூலி லேயே இன்று சேர்த்தாச்சு. இங்கு அட்மிஷன் ஃபீசும், சம்பளமும் சேர்ந்து 1485 ரூபாய் ஆச்சு. ராமகிருஷ்ணாவில் ரூ. 450/- தான் ஆகியிருக்கும். டெர்ம்ஃபீஸ் இங்கு ரூ. 850/- ராமகிருஷ்ணாவில் ரூ. 325/- ஆனால் அங்கு இடம் கிடைக்கவில்லை. உங்கள் 1-7-91 கடிதம் இன்று வந்தது. -

அன்பு

థi. భీ,