பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வல்லிக்கண்ணன்

மெளனி பற்றிய கருத்தரங்கு நிகழ்த்தத் திட்டமிட்டிருப்பது வரவேற்புக்கு உரியது. வேதசகாய குமார், பூரண சந்திரன், ராஜதாயஹம், ஞானி, ஆல்பர்ட் ஆகியோருடன் திலீப் குமாரிடமும் கட்டுரை வாங்கலாம். இவர் மெளனி பற்றி ஆழ்ந்த கட்டுரைகள் எழுதியவர். 1992 எப்ாவில் இலக்கியச் சிந்தனை வெளியிட இருக்கிற (எழுத்தாளர் பற்றிய நூல் வரிசையில்) மெளனி பற்றிய நூலை திலீப்குமார் தான் எழுதுகிறார்.

நான் இந்த 22ம் தேதி (செவ்வாய்) சிவகாசி போகிறேன். செ. ஞானன் எனும் தண்பர், அவருடைய நண்பர் ஒருவர் முன்பு My Magazine'ல் எழுதிய இங்கிலீஷ் கதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறார். அந்த வெளியீட்டு விழா 27 ஞாயிறு அன்று சிவகாசியில் நிகழும். நான் 5 நாட்கள் ஞானனின் விருந்தாளி, பிறகு திருநெல்வேலி போவேன். தி.க.சியையும் மற்ற நண்பர்களையும் சந்திப்பேன். சில மாதங்கள், அல்லது பல வாரங்கள், தங்குவது சாத்தியமில்லை. சில நாட்கள் இருந்துவிட்டு, சென்னை திரும்புவேன். எனது பிறந்தநாள் நவம்பர் 12, நண்பர்களால் கொண்டாடப்படுகிறது. நிதி அளிப்பு தரத் திட்டமிட்டிருக்கிறார்கள். மயிலாப்பூர் சீனிவாச சாஸ்திரி ஹாலில், நலம் நாடுவதும் அதுவே.

அன்பு

©Ꭵ. Ꮬ.

சென்னை.

20-ff-97

அன்பு மிக்க இராமலிங்கம்,

வணக்கம். நலம். ஒரு வாரம் அடைமழை வெளுத்து வாங்கிவிட்டது. நெய்வேலி யும் மழையினாலும் காற்றினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். - - -

மெளனி பற்றிய கருத்தரங்கு எந்நிலையில் இருக்கிறது? மெளனி கதைகள் புத்தகம் வெளிவந்துவிட்டதா? -

அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இப்ப தான் படித்தேன். பலரும் குறிப்பிட்டுச் சொல்வது. 1985ல் வெளிவந்தது. வித்தியாசமான முறையில் எழுதப்பட்டுள்ள (நாவல் இல்லாத) நாவல். A-Novel. அவர் அயோவா யுனிவர்சிட்டியில் கழித்த சில மாதங்களில் நடந்த