பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 104

வெள்ளோட்டம் போன்றதுதான் சென்னை நகரை நோக்கிய எனது நடைப்பயணம்.

நாள்தோறும் சோர்வுறாது முப்பது மைல்கள் நடக்க முடியுமா? பதின்மூன்று (அல்லது பதினைந்து நாள்கள் போதிய உணவு இல்லாமல் நடந்துபோவது சாத்தியப்படுமா? அப்படி நடந்துபோய், சென்னையை அடைந்ததும் என்ன செய்வது? இவ்விதமான சந்தேகம் எதுவும் என் மனசில் எழவில்லை. நடந்தே சென்னை சேரவேண்டும் என்பது ஒரு வெறியாக என்னுள் கனன்று கொண்டிருந்தது. அப்போது எனக்கு வயது இருபத்து இரண்டு.

ஆகவே நடக்கலானேன். ஒரு துணிப்பையில் இரண்டு வேட்டிகள் இரண்டு துண்டுகள், இரண்டு சட்டைகள். எழுது வதற்குச் சில தாள்கள் மற்றும் பேனா. வீட்டில் அவல் இருந்தது. வழியில் உண்பதற்கென்று கொஞ்சம் அவல் எடுத்துக்கொண்டேன். காசுகள் எடுக்கவில்லை.

நடந்தேன். முதல்நாள் இருட்டுவதற்கு முன்னதாகவே கோவில்பட்டி சேர்ந்தேன். முப்பத்தைந்து மைல்கள்.

அக்காலத்தில் ரஸ்தாக்களில் பஸ் போக்குவரத்து அதிகம் கிடையாது. லாரிகள் அபூர்வமாகத்தான் காணப்படும். சரக்குகளை ஒர் ஊரிலிருந்து பிறஇடங்களுக்கு எடுத்துச்செல்ல கூண்டு வண்டிகள் உபயோகத்தில் இருந்தன. கட்டை வண்டிகள் (மொட்டை வண்டி) சர்வசாதாரணமாக இயங்கிக் கொண்டி ருந்தன. ரோடுகளில் நடந்துசெல்கிற பயணிகளும் அதிகம் இல்லை. அது இரண்டாவது உலக மகா யுத்தகாலம். ரயில் குறைக்கப் பட்டிருந்தது. வெறிச்சோடிக் கிடந்த தண்டவாளம் நெடுகிலும் காட்சி தந்தது.

கோவில்பட்டியில் ரயில் நிலையத்தின் தாழ்ாைரத்தின் ஒரு மூலையில் படுத்தேன். அயர்ந்து தூங்கிவிட்டேன். (தற்காலத்திய கோவில்பட்டி நிலையம் நவீன வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 1940களில் சாதாரண, பழைய மாடல் கட்டடமாகத்தான் இருந்தது. இரண்டாம் நாள் காலையில் எழுந்து நடந்தேன். அவல் தான் அவ்வப்போது உணவாக உதவியது. முன்தினங்களில் மழை பெய்திருந்ததால் வழி நெடுகப் பள்ளங்களில் தண்ணிர் தேங்கிக் கிடந்தது. அதுவே எனக்குக் குடிதண்ணிர் விருதுநகருக்குப் புறத்தே காணப்பட்ட சாலையோரக் கட்டடத்தின் திண்ணையில் படுத்தேன். மாலை நேரம். தூக்கம் என்னை ஆட்கொண்டது.

திடீரென விழிப்பு வந்தது. நல்லஇருள். நடந்தேன். விருதுநகர் விளக்குகள் வெளிச்சத்தோடு விழித்திருந்தன. பல கடைகளில்,