பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 11 அபாயத்தீவுகள், கப்பற்படைகள், பாதாளச்சிறைகள் என்றெல்லாம் வரும் உக்கிரசேனர், வீரசிம்மன் போன்ற பெயர்கள் காணப்படும். அந்தக் காலத்தில் சரித்திர நாயகர்களுக்கு இப்படி எல்லாம் தான் பெயர் இருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் எண்ணியதாகத் தெரிகிறது. சிறுகதைகள், நாடகங்கள் முதலியவற்றில் இவ்விதமான பெயர்கள் அதிகம் இடம் பெற்றன.

சரித்திரக்கதை என்றாலே ராஜாராணிக் கதைதான். ராஜாராணிகளின் வேலைத்தனங்கள் பற்றிக் கேட்பதிலும் படிப்ப திலும் ஜனங்களுக்கு எப்பவுமே தனிமோகம் உண்டு.

தமிழின் முதல் நாவல் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டி ருக்கிற பிரதாபமுதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை நம் மக்களின் ரசனையைச் சரியாக அறிந்து நற்சான்று கூறியிருக்கிறார்.

ராஜா ராணிக் கதைகளைக் கேட்பதிலும் படித்தறிவதிலும் நம் நாட்டினருக்கு விசேஷமான ஈடுபாடு உண்டு. விசாலமான மாளிகைகளின் உப்பரிகைகளிலும், அழகான நந்தவனங்களிலும் ராஜாக்களும் ராணிகளும், இளவரசர்களும் இளவரசிகளும் நடப் பதையும் இருப்பதையும் படுத்து மகிழ்வதையும் அறிந்து கொள் வதில் ஜனங்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவது வழக்கம். அவர் களின் ரசனையைத் திருப்திப்படுத்தும் விதத்திலும் இந்த நாவலின் கதைப்போக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரீதியில் இது நேரடி மேற்கோள் இல்லை) வேத நாயகர் தனது நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நம் நாட்டு மக்களின் சுவையைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குத் தக்கபடி சுவை மிகுந்த நாவல்களை உருவாக்கு வதில் மிகுந்த வெற்றிகண்டவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி,

கள்வனின்காதலி என்கிற ரொமான்டிக் நாவலையும் தியாகபூமி, மகுடபதி போன்ற சமூக தேசிய நாவல்களையும் தொடர்கதைகளாக எழுதிய பிறகு, கல்கி தன் கவனத்தைச் சரித்திரநாவல் மீது திருப்பினார்.

கல்கி தனது திறமையினால் தமிழ்நாட்டில் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பத்திரிகையின் சர்குலேஷனை வளர்ப்பதில் கருத்தாக இருந்தார். அதற்குத் தொடர்கதையை வெற்றிகரமான ஒரு சாதனம் ஆக்கினார். சாதாரண சமூக அல்லது அதீதக் கற்பனாலங்காரக் கதைகளைவிட சரித்திரப் போலிகளான தொடர்கதைகள் நன்கு பயன்படும் என்று அவர் உணர்ந்தார்.

சரித்திரநாவல் என்ற வடிவம் நல்ல வரவேற்பைப் பெறு வதற்கான சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்தது.