பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

碟戟 வல்லிக்கண்ணன்

ஆயினும், அவரது அனைத்துக் கதைகளும் பேய்க்கனவுகள் என்ற தன்மையில் இல்லை. மனித சமூகத்தின் அவலங்களையும் சிறுமைகளையும் கண்ட ஒரு கலைஉள்ளத்தின் வேதனைகளாகவும், சோக உயிர்ப்புகளாகவும் அவருடைய பல கதைகள் அமைந்திருக் கின்றன. மனிதரின் சிறுமைகளையும் பலவீனங்களையும், வாழ்க்கை முரண்பாடுகளையும் கண்டு பரிகசிக்கிற, கிண்டல் பண்ணுகிற, மனசின் குரல்களாக அநேகக் கதைகள் காணப்படுகின்றன.

ஒரு தனிச்சம்பவம் அல்லது உணர்ச்சி அல்லது குண விஸ்தாரம் அல்லது வர்ணனை எடுத்தாளப்படும் விரிக் என்ற கவிதைப்பகுதி போல் சிறுகதை எழுதுவதிலும் புதுமைப்பித்தன் ஆர்வம் காட்டினார். அவற்றுக்கென்று சிறுசிறு வாக்கியங்களைக் கொண்ட தனிநடையையும் அவர் கையாண்டார். தெருவிளக்கு, மிஷின்யுகம், பொன்னகரம், கவந்தனும் காமனும் போன்ற பல கதைகள் இத்தன்மை கொண்டவை.

இப்படிப்பட்ட கதைகளிலும் வாழ்க்கையின் யதார்த்தங் களைச் சுட்டிக்காட்டி, போகிறபோக்கில் தனது சிந்தனைகளையும் உரக்கச்சொல்லி, வாசகரையும் சிந்திக்கத் துரண்டுகிறார் புதுமைப் பித்தன். "பசி ஐயா பசி, பத்தும் பசி வந்திடப்பறந்துபோம் என்று வெகு ஒய்யாரமாக உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே அங்கு நீர் ஒருநாள் இருந்தால் உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்" இது ஒரு கதையில் வருவது.

இருட்டில் விபசாரம் நடப்பதைச் சுட்டிக்காட்டி, நாகுக் காகக் கண்ணை மூடவேண்டாம். நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்ளின் ஷர்ட்டு, உங்கள் ஷெல்பிரேம் கண்ணாடி, எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். இப்படிக் குத்தலாக உண்மைகளை அங்கங்கே சிதறிச் செல்வது அவருடைய பாணி. கண்கள் இருப்பது எதையும் பார்ப்பதற்குத் தான் என்ற இரும்புத்தத்துவம் பெற்றிருக்கவேண்டும் என்று குறிப்பிடும் புதுமைப்பித்தன் கண்களால் கண்டவற்றை எல்லாம் கதைகளில் எடுத்துச் சொல்லவேண்டியதுதான் என்ற கொள்கை யைக் கொண்டிருந்தார்.

அதனால்தான், நோயாலும் பசியாலும் கஷ்ட்ப்படுகிற புருஷனுக்குப் பால்கஞ்சி வார்ப்பதற்காக இருட்டின் ஒர சந்தில் ஒரு அந்நியனுடன் மறைந்து சோரம்போய் முக்கால்ரூபாய் சம்பாதிக்கிற மில்கூலி அம்மாளுவையும், பொன்னகரம் இருட்டுப் பாதையில் நின்று, வழியோடு போகிறவனை என்னய்யா சும்மா போறே? வாரியா? என்று கூப்பிடும் தெருவிபசாரியையும் (கவந்தனும் காமனும் அவர் தனது கதைகளில் எடுத்துக் காட்டினார்.