பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ? வல்லிக்கண்ணன்

கிே.

பெருகும். மனிதனுடைய பெருமை இடையீடின்றி ஓங்கி இலட்சிய சாகரமாகிவிடும். சிந்தனை வளருவதற்குப் பல பொருள்களைப் பற்றிய அறிவு இன்றியமையாதது. இதை உணர்ந்து இந்தத் தேவையை நிறைவாக்கவே சிந்தனை மலர்கிறது. தெளிவு, ஆழம், புதுமை - இவையே சிந்தனையில் வெளியாகும். கட்டுரை வன்மையும், சிந்தனை நேர்மையும் ஒருங்கே பெற்ற நிபுணர் பலர் சிந்தனையின் மூலமாக உங்களோடு உறவாடுவார்கள். இப்படி

எஸ். வையாபுரிப்பிள்ளை ஒவ்வொரு நாட்டின் இலக்கிய உதயம் பற்றியும் சிந்தனையில் விரிவாக எழுதினார். இந்திய இலக்கியங்கள் (காளிதாஸன், தாகூர் முதலியோர்) குறித்து கி. சந்திர சேகரன், டாக்டர் வே. ராகவன், ரா. பூரீ தேசிகன் முதலானோர் எழுதிவந்தார்கள். ப. கோதண்டராமன் ஐரோப்பிய, ரஷ்ய இலக்கியங்கள் பற்றி எழுதினார். எஸ். மகராஜன் தனித்தன்மை கொண்ட சிந்தனைக்கட்டுரைகள் எழுதிவந்தார். கலாசாரமும், வருக்கமும், மொழியும் மரபும், இலக்கிய விமர்சனம் என்ற தன்மைகளில் அ. சீ. ரா. சிந்தனைகள் வழங்கினார். தன்ஒளி என்ற தலைப்பில் ஆக இயல், ஆன்மீக ஆய்வு, தத்துவ ஆராய்ச்சி முதலியன அடங்கிய பெரிய விஷயம் ஒன்று தொடராகப் பிரசுரம் பெற்றது. அசீரா. எழுதிய அருமையான நாடகங்கள் அவ்வப் போது வந்தன. இதழ்தோறும் ஒன்று அல்லது இரண்டு சிறுகதை களே இடம் பெற்றன. ப. துரீனிவாசன், கரிச்சான்குஞ்சு, வல்லிக் கண்ணன், அசோகன், ஸ்வாமிநாத ஆத்ரேயன், துறைவன் போன் றோரின் படைப்புகள் அவை.

சிந்தனை சிறப்பாக ஒரு ஆண்டுமலர் தயாரித்தபிறகு ஒய்ந்துவிட்டது.

1939 வாக்கில் தோன்றி, 1940களில் நன்கு வளர்ந்து, 1950 களின் ஆரம்ப வருடங்களில் சிறிது காலம்வரை வாழ்ந்த ஒரு நல்ல பத்திரிகையை இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால், அது இலக்கியப்பத்திரிகை அல்ல. வை. கோவிந்தன் நடத்திய சக்தி' தான் அது.

முதலில் நாலைந்து வருடகாலம் சக்தி டைம் பத்திரிகை அளவில், அதே அட்டை அமைப்போடு, அகலமாய், பெரிதாய் வந்தது. சுவாமி சுத்தானந்த பாரதியின் எழுத்துக்களே வெகு அதிகமாக அதில் இடம் பெற்றுக்கொண்டிருந்தன. மூன்றாம் ஆண்டில் திஜர தி.ஜரங்கநாதன்) அதன் துணைஆசிரியர் ஆனார். பத்திரிகை புதுவனப்பும் புத்துயிரும் பெற்றது. அன்றிலிருந்து சக்தி ஒரு டைஜஸ்ட் ஆகவே வளரலாயிற்று. உலகத்துப் பத்திரிகைகளி லிருந்து எடுத்து, தமிழில் தரப்பெற்ற பல்வேறு விஷயங்கள்