பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வல்லிக்கண்ணன்

இலங்கையில் வியாபாரம் செய்துகொண்டே இலக்கியப் புரவலராகவும் எழுத்தாளராகவும், எழுத்தாளர்களின் நண்பராகவும் வாழ்ந்த ஒட்டப்பிடாரம் ஆகுருசுவாமி பிற்காலத்தில் என்னிடம் அடிக்கடி சொன்னது உண்டு. இந்த இலக்கியத்தாக்கங்கள் செயல் அலைகள் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும் என்ற முடிவுரை யோடு அவர் இப்பேச்சை முடிப்பது வழக்கம்.

இலங்கையின் இலக்கியப்பத்திரிகைகள் மற்றும் புத்தக வெளியீடுகள் குறித்து விரிவாக எழுதப்படவேண்டியது அவசியமே. ஆனால் அவ்விதம் எழுதுவதற்கு எத்தனையோ தடங்கல்கள். அங்கே வெளியான புத்தகங்கள், பத்திரிகைகள் முதலியன தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. இது பெரிய குறைபாடு.

கிராமஊழியன், சரஸ்வதி, எழுத்து காலங்களில் இலங்கை நண்பர்களோடு ஒரளவு தொடர்புகொள்ள முடிந்திருந்தது. பின்னர் அது நின்றுபோயிற்று. 1970களில் இலங்கையில் பலப்பல சிறு பத்திரிகைகள் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது. அவற்றைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு இங்கே யாருக்கும் கிட்டியதாகத் தெரிய வில்லை. என் இனிய நண்பர்கள் சிலரது உதவியினால் ஒரளவுக்குத் தகவல்கள் எனக்குக் கிடைக்க வழி ஏற்பட்டது. அவற்றை ஆதார மாகக் கொண்டுதான் நான் இக்கட்டுரையை எழுத வேண்டி யிருக்கிறது. சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் பல இதழ்களைப் பார்க்கமுடியாத நிலையில், கிடைத்த ஒன்று இரண்டைப் பார்த்து விட்டு அவை பற்றி எழுத நேரிட்டிருப்பதால், இலங்கைச் சிறு பத்திரிகைகள் பற்றி மேம்போக்காய்ச் சில தகவல்களை மட்டுமே தரமுடிகிறது.

இலங்கை தினகரன் நாளிதழின் வார மஞ்சளியில், தெளிவத்தை ஜோசப் என்ற ஈழத்துஎழுத்தாளர் ஈழத்து முற்போக்கு இலக்கியப் பாரம்பரைக்கு வித்திட்ட ஏடு பாரதி பற்றி விரிவாகவே எழுதி இருக்கிறார்.

ஜனரஞ்சகப் பத்திரிகைகளான வணிகப் பத்திரிகைகள், கொள்கைப்பிடிப்போடு நடத்தப்படுகிற சிற்றேடுகள் குறித்து விளக்கமாக அறிவிக்கும் அவருடைய கட்டுரையிலிருந்து சில வரிகள். "எவ்வித சமுதாயநோக்கமோ இன்ன பிறவோ இன்றி வெறுமனே மக்களின் இரசனையை மழுக்கி வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பத்திரிகைகளுக்கு அரையிலும் குறையிலும் நிறுத்தப்படவேண்டிய அவசியம் இருப்பதில்லை.

அவர்களுடைய இலக்கு பணம் இலக்கை நோக்கிப் பயணம் செய்யும்போது இடையே வரும் தடைகளை உடைத்தெறியப் பணத்தால் முடியும்.