பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 வல்லிக்கண்ணன் கதைகள்

வேட்டையாடவும் அவரை அழைத்துப் போனார். அந்த அன்பரும் 'சான்ஸ் வரும்போது உங்களுக்கு தந்தி கொடுக்கிறேன்' என்று சொல்லிப்போனார்.

சும்மா இருக்க முடியுமா சிங்காரத்தால்? அவர் அடிக்கடி நடிப்புப் பயிற்சிகள் செய்துகொண்டிருந்தார். பெரிய கண்ணாடி முன்னே நின்று முகத்தைச் சுழித்தும் இளித்தும் பலவிதக் கோரணிகளும் பண்ணிக் களித்தார். முகபாவங்களை நடித்துப பழகினார் அப்படி, உத்திரத்திலிருந்து கயிறு கடடித தொங்கி, தூண்மேலே ஜம்ப் பண்ணிப் பழகினார். ஸ்டனட நடிபபுககு தன்னை தயார்படுத்திக் கொள்வதாக அவர் சொன்னார்.

இதுபோன்ற சமயங்களில் சிங்காரத்தைப் பார்க்க நேரிட்டவர்கள், 'இவருக்கு பைத்தியம் பிடிச்சிட்டுது போலிருக்கு!' என்றுதான் நினைத்தார்கள். அவ்வளவுக்கு சினிமா நடிப்புப் பித்து சின்னப்பண்ணையாரை ஆட்டி வைத்தது.

திடீரென்று சிவபுரம் வாசிகள் ஒரு புதிய காட்சியைக் கண்டார்கள். சின்னப் பண்ணையார் குதிரை மீது பவனி வந்தார்.

அருமையான குதிரை ஒன்றை வாங்கி, சவாரி பழகி, சிங்காரம் அதன் மீதமர்ந்து ஊரைச் சுற்றினார். காலையிலும் மாலையிலும் ஊர்ப் புறத்து ரோடுகளில் வேகமாகக் குதிரை சவாரி செய்தார். சினிமா ஹீரோ குதிரை மீது செல்கிற கட்டங்களை அவர் கற்பனை செய்து கொண்டு அவ்வாறெல்லாம் திரிந்தார்.

தேர்ந்த வாத்தியார் ஒருவரை ஏற்பாடு செய்துகொண்டு வாள் பயிற்சி, சிலம்ப வித்தை எல்லாம் கற்கலானார் அவர். எதைச் செய்தாலும் சினிமா ஹீரோ என்ற கோணத்திலேயே அவர் இயங்கினார்.

"சினிமாவிலே நடிக்கிற சான்ஸ் கிடைக்காமல் போனால், ஐயா அவுட் ஆயிடுவார் போலிருக்கே! அந்த ஏக்கத்திலேயே பைத்தியம் ஆயிடுவாரு' என்று அவரை அறிந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

அப்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. 'நான் கூடிய சீக்கிரம் மெட்ராஸ் போக வேண்டியிருக்கும். இங்கே வந்திட்டுப் போனாரில்லே சினிமா டைரக்டர், அவர் லெட்டர் எழுதியிருக்காரு. ஒரு சான்ஸ் கிடைக்கும்னு தோணுது' என்று சிங்காரம் ஒரு நாள் செய்தி அறிவிப்பு செய்தார்.

அது வேகமாகவே சிவபுரம் நெடுகிலும் பரவியது. நம்ம சின்னப் பண்ணையார் சினிமாவிலே நடிக்கப்போறாரு!’ என்று சந்தோஷமாகப் பேசிக் கொண்டார்கள் ஊர்க்காரர்கள்.