பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளுர் ஹீரோ 31

'டைரக்டரிடமிருந்து ட்ரங்கால் வந்தது. நாளைக்கு நான் புறப்படுகிறேன்' என்று சிங்காரம் தெரிவித்தார் ஒருநாள்.

அவர் சென்னைக்குப் புறப்படுவதற்கு முந்திய நாள் மாலை டிப்டாப்டாக டிரஸ் செய்துகொண்டு, குதிரை மீது அமர்ந்து ஜம்மென்று ஊர்வலம் வந்தார். அதையும் போட்டோ பிடிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

சின்னப் பண்ணையாரின் பங்களாச் சுவர்களில் அப்படி ஏகப்பட்ட போட்டோக்கள் தொங்கின. விதம் விதமான போஸ்களில் சிங்காரம் காட்சி தரும், சிரித்து விளங்கும் போட்டோக்கள்.

'இனிமேல் சினிமா ஸ்டில்களையே ஃபிரேம் பணணிமாட்டி விடலாம்' என்று அவர் மனம் எண்ணியது.

'சிவபுரம் ரிக்ரியேஷன் கிளப்' சிங்காரத்துக்குப் பிரிவு உபசாரக் கூட்டம் நிகழ்த்தியது. அவரது நடிப்புத் திறமையைப் பாராட்டிப் பலர் பேசினார்கள். மாலைகள் சூட்டினார்கள்.

அவர் பிரயாணம் கிளம்பிய மாலையில் அவரை வழி அனுப்புவதற்காகப் பெரும் கூட்டம் திரண்டு நின்றது. ரயில்வே நிலையத்தில் ஏகப்பட்ட மாலைகள் அவருக்கு அணிவிக்கப்பட்டன. எக்ஸ்பிரஸ் புறப்பட்டபோது, "நம்ம ஊர் ஹீரோ வாழ்க! சினிமா ஹீரோ சின்னப்பண்ணை சிங்காரம் அவர்களுக்கு ஜே!’ என்ற கோஷங்கள் ஒலித்தன. . . -

சிங்காரம் வாசலில், சினிமா ஹீரோவுக்கு உரிய தோரணையோடு நின்று, ஒய்யாரமாக போஸ் கொடுத்து, அழகாகச் சிரித்து, ஸ்டைலாகக் கையசைத்தார். வண்டி நகர்ந்து வேகம் பிடிக்கிறவரை அவர் அவ்வாறே கையசைத்து, பிரியா விடை பெற்று நின்றார். -

அவரைப் பற்றியும், அவர் நடிக்கப் போகிற படம் பற்றியும் கற்பனையோடு சுவாரஸ்யமாக அளந்து மகிழ்ந்தபடி உள்ளுர் அன்பர்கள் பிரிந்து போனார்கள். .

சில மாதங்கள் சிங்காரம் சென்னையிலேயே தங்கிவிட்டார். படம் சம்பந்தமான வேலைகள் முழுவதும் முடிந்த பிறகுதான் அவர் சிவபுரம் திரும்பினார். - .

சிங்காரத்தின் நண்பர்கள் அவரைக் கண்டுபேச வந்தார்கள். மற்றும் பலரும் அவரைப் பார்த்துக் கும்பிடு போட்டு நலம் விசாரித்தார்கள். -

எல்லோரிடமும் சொல்வதற்கு சின்னப் பண்ணையாரிடமும் விஷயங்கள் நிறையவே இருந்தன. சென்னை மாநகரம்