பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

வல்லிக்கண்ணன் கதைகள்

அவளேதான் நீ எனும் சத்தியம் என்னுள் பொறி தெறிக்க வைத்தது...'

அவனால் காதலிக்கப்பட வேண்டிய பெண் அவன் முன்னால் வந்து தோன்றிய போது நம்பி எழுதி வைத்த வரிகள் இவை. அதை எத்தனை தடவைகள் அவன் படித்துப் படித்துச் சுவைத்துவிட்டான். இப்போதும் படித்தான். அந்த சந்தர்ப்பம் பசுமையாய் அவன் நினைவில் நிழலிட்டது.

ஒரு நாள் அவன், அழகான ரஸ்தா என்று அவன் கருதிய ஒரு இடத்தில், பாதை ஓரத்தில் அமர்ந்த, விண்ணையும் மண்ணையும் கண்டு வியந்து கொண்டிருந்தான். மனசில் அலை மோதிய எண்ணங்கள் காரணமாக அவன் முகம் மலர்ச்சியுற்றிருந்தது. எதையோ எண்ணி அவன் சிரித்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அவள் வந்தாள்.

வழியோடு போனவள், தன்னைப் பாராமல் வெறும் வெளியைப் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்கும் கலைஞன். அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்தாள், அவன் கவனத்தை கவர்வதற்காக அவள் கைவளைகளை கலகலக்கச் செய்தாள். அப்போது தான் அவளுக்குத் திடீர் தொண்டைப் புகைச்சல் வந்தது! தொண்டையைச் செருமிச் சரிப்படுத்தினாள்.

நம்பி கவனிக்காமல் இருப்பானா? பளிச்சிடும் தக்காளிப்பழ வர்ண ஆடையும் நாகரீக உருவமுமாய் மெதுநடை நடந்த யுவதியைக் கண்ட உடனேயே, கவிதையாய் வந்த காதலி என்ற சொல் உதயமாயிற்று. அவன் உள்ளத்திலே. 'காதலாய் வந்த கவிதையே! கவிதையாய் அசையும் சுந்தரி!' என்றும் அவன் நோட்டில் குறித்துக் கொண்டான்.

அவனும் அவன் செயலும் அவளுக்கு விசித்திரமாகப்பட்டிருக்க வேண்டும். திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துக் கொண்டே நடந்தாள்.

'காந்தம் ஒளிருது சுழல் விழியில்: சுந்தரம் சிரிக்குது உன் இதழ் கடையில்' என்ற வரிகளும் அவனுக்கு உதயமாயின. ஆகா, இவள்தான் என் கவித்திறனை வளர்க்கக் கூடிய காவியமகள் என்று அவன் முடிவு கட்டாது எவ்வாறு இருத்தல் கூடும்?

'எவனோ... பைத்தியம்...'

மறுநாள். அவள் அவ்வழியே வந்தாலும் வரலாம் என்ற எண்ணத்தோடு, வர வேண்டும் எனும் ஆசையோடு - அவசியம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் அவன் அதே இடத்தில்