பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலுக்குத் தேவை 41

காத்திருந்தான். ஏமாறவில்லை. அவள் வந்தாள். மறுநாளும், அதற்கு மறுநாளும், தினந்தோறும்!

அந்நேரத்தில் அவ்வழியே தினசரி போயாக வேண்டிய வேலை அவளுக்கு உண்டு என்பதை புரிந்து கொண்ட நம்பிராஜன் நாள்தோறும் அங்கே வந்து காதிருப்பதைத் தனது முக்கிய வேலையாக ஏற்றுக் கொண்டான்.

பார்வைப் பழக்கம் பேச்சுத் தொடர்புக்கும், சேர்ந்து நடந்து போகும் பழக்கத்துக்கும் வழி அமைத்துக் கொடுத்தது. அதற்கு அவளும் செயலூக்கத்தோடு உற்சாகம் காட்டினாள். அவனுக்குத் துணிச்சல் தந்தாள். அவளைப் பற்றி அவன் எழுதிய கவிதை வரிகளை அவளுக்குப் படித்துக் காட்டினான். அவள் மிக மகிழ்ந்து போனாள்.

நம்பிராஜன் அவளைச் சந்திக்க சில சமயம் அவள் வீட்டுக்குப் போவதும் உண்டு. அதை அவள் ஆட்சேபிக்கவும் இல்லை; அடிக்கடி வரவேண்டும் என்று விரும்பி அழைக்கவுமில்லை. அவள் வீதியிலும், கடலோரத்திலும் சந்தித்துப் பொழுது போக்குவதைத்தான் பெரிதும் ரசித்தாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அதனால் இயற்கை இனிமைகளையும் அவளது இயற்கை மோகத்தையும் இணைத்து அநேக பக்கங்கள் எழுதி வைத்தான்.

அவன், காதல் வளர்க்கும் பலரையும் போல அவளை ஒட்டலுக்கும் சினிமாவுக்கும் அழைத்துப் போக வில்லை. அவன் அழைத்துச்செல்வான், அப்படி அழைத்துப் போக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால் அவனிடம் கோரிக்கை விடுக்கவில்லை.

ஒரு சமயம். வெகு தூரம் நடந்து அலுத்த பிறகு, பெரிய ஒட்டல் ஒன்று தென்படவும், 'உள்ளே போகலாமா? ஏதாவது சாப்பிடணும் போல் இல்லை?” என்று அவள் தூண்டினாள். அவனும் 'ரெடியாக' அவளோடு சென்றான். இரண்டு பேருக்கும் நல்ல பசி, ஸ்வீட், டிபன், காப்பி என்று சுவைத்துச் சாப்பிட்டார்கள். சுவையான பேச்சுகள் பரிமாறிக் களித்தார்கள். அவள் என்ன எண்ணத்தில் அவனை ஒட்டலுக்கு அழைத் தாளோ? அவன் 'பில் பணம் நான் தருகிறேனே!' என்று சொல்லுக்குக் கூட சொல்லவில்லை. அவள் தான் பணம் கொடுக்க நேர்ந்தது.

கவிஞரிடம் கற்பனையும் கவிதையும் நிறையக் கிடைக்கும். காசுக்கு வழி ஏது? சித்ரா புத்திசாலி. அதனால் அவள் மறுபடி