பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 வல்லிக்கண்ணன் கதைகள்

நான் ஏன் கதைசொல்ல ஆரம்பித்தேன் என்ற கவலை உனக்கு ஏன்? கதைசொல்வது யாராக இருந்தால் என்ன? கதை நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை கவனி அதுதான் முக்கியம்" என்று பதுமை பெரிய தனம் பண்ணியது.

இவ்வளவுக்குத் துணிந்துவிட்ட அது, நான் "வேண்டாம்” என்று சொன்னால் மட்டும், பேசாமல் இருக்கப்போகிறதா என்ன? அதனால், "சரிதான் உன் இஷ்டம்போலவே அளந்து தள்ளு!" என்றேன்.

நான் ஒண்னும் அளக்க வரவில்லை. இது நிஜமாகவே நடந்தது தெரியுமா?" என்றது பதுமை.

பெரிய கதாசிரியர்கள் முதல் இளம் கதைக்காரர்கள் ஈறாக, எல்லோரும் இப்படித்தான் முன்னுரை கூற ஆசைப்படுகிறார்கள் என்று கனைத்தது எனது மனக்குறளி.

'சந்திரன் என்கிற வாலிபனும், ஆனந்தவல்லி என்ற பெண்ணும் ஒருவர்மேல் ஒருவர் ஆசையாக இருந்தாங்க' என்று பொம்மை தன் கதையை ஆரம்பிக்கவே, நான் ஏமாற்றம் அடைந்தேன்' என்று சொல்லத்தான் வேண்டும். அது இவ்வாறு திடுதிப்பென்று கதையை ஆரம்பிக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை 'ரொம்ப நாளைக்கு முன்னே ஒரு ஊரிலே...' என்றோ, 'முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்’ எனவோ அது பேசத் தொடங்கும் என்று நினைத்தேன்.

என் ஏமாற்றத்தைச் சமாளிப்பதற்காக நான் குறை கூறலானேன் 'என்ன பேரு இது, ஆனந்தவல்லி என்று! வசந்தா, பிரேமா, ஹம்ஸா, சாரு, சுலோ, பத்மு என்ற ரீதியில் அழகா, நாகரிகமாகப் பெயர் வைக்கப்படாதோ அந்தப் பெண்ணுக்கு? என்று முணமுணத்தேன்.

'இதுமாதிரி ஊடே ஊடே நீ வால் தனம் பண்ணிக் கொண்டிருந்தால் நான் சொல்லவந்ததைச் சொல்ல மாட்டேன் ஆமாம்' என்று உறுதியாக அறிவித்தது பொம்மை.

அம்மா தாயே தெரியாமல் செய்து விட்டேன். இனி அவ்விதம் செய்யவில்லை என்று என் மனம் பேசியது.

'நான் அம்மாவுமில்லை, தாயுமில்லை. ஆமா...' என்று அது முறைத்தது.

'தப்பு, தப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா?'

நீ பேசாமல் கம்முனு இருந்தால் போதும் என்று எச்சரித்துவிட்டு அது கதையைத் தொடர்ந்தது.

'ஆனந்தவல்லி அழகுன்னா அழகு அப்படியாப்பட்ட அழகு!"... so - .