பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 90 பயிர்த் தொழிலை நம்பி வாழும் மக்கள் நிறைந்த ஊர் களில் அதுவும் ஒன்று. ஊரைச் சுற்றிலும் வயல்கள் நெடுகி. இம் நெல் பயிர் பசுமைக் காடாக வளர்ந்து நின்றது. ஆனால் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. குளத் திலும் கால்வாய்களிலும் நீர் இல்லை, மழைபெய்வதாக இல்லை. மக்கள் வறண்டு கிடந்த வானத்தைப் பார்த்து பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார்கள், மழை கட்டாயம் வேண்டும். மழை பெய்யாவிடில், பச் சைக் கடலாய் காற்றோட்டத்துக்கு ஏற்ப அலை மோதிக் கொண்டு குளுகுளு இனிமையாய் பரந்து காட்சி தரும் பயிர் பூராவும் கருகிவிடும். இப்போதுகூட வயல்களில் மண் நன்கு காய்ந்து, வெடிப்புகள் விழுந்து தோன்றின. வறட்சி வேரைத் தீய்த்து பயிரைச் சுருக்கிவிடும். --> அந்நிலையை நினைக்கவே ஊர் மக்களின் மனம் பதை பதைத்தது. சென்ற வருடமும் இதே நிலைமைதான் ஏற்பட் டிருந்தது. 'தீ சாவி அறுக்க வேண்டிய அவசியம் உண் டாயிற்று. பாடுபட்டு, விதையைக் கொட்டி, பணத்தை முடக்கி, பயிரிட்டுப் பலனை எதிர்பார்த்திருந்தவர்களின் நெஞ்சும் வயிறும் கொதிக்காமல் என்ன செய்யும்? -இந்த வருஷமும் அதே கதிதானா? அட கடவுளே, உனக்கு ஈவு இரக்கம் கிடையாதா? பாடுபட்டவர்கள் உள்ளம் குமைந்தார்கள். -ஊரிலே பாவிகள் பெருத்துப் போனார்கள். பாவம் பெருகிப் போச்சு அப்படி இருக்கையிலே மழை எப்படிப் பெய்யும்? சுற்றிலும் அங்கும் இங்குமாக மழை பெய்தது. தேவை இல்லாத கட்டாந் தரைகளிலும், முள் மரங்கள் மண்டிய