பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 1 12 போதிலும், அவருடைய உள்ளம் ஆசைப்பட்டதே வேறு அன்று மூன்றாவது செவ்வாய், அந்தி வேளை. பாலுப்பிள்ளை வழக்கமான தோரணையோடு, மூக்க பிள்ளையைப் பார்க்கப் போனார். அப்போதும் பெரியவர், கட்டிலில் பல தலையணை களை வசதியாக வைத்து சுகமாகச் சாய்ந்திருந்தார் இவரைக் கண்டதும் அவர் கண்களில் ஒரு பொறி ஒளிர்ந்து மங்கியது. “வந்துவிட்டான் சாகுருவிப் பய! முழிக்கிறதைப் பாரு ஆந்தை மாதிரி’ என்று அவர் மனம் சிரித்துக் கொண்டது. பாலுப்பிள்ளை ஒரு நாற்காலியில் வசதியாக உட் கார்ந்து, அண்ணாச்சியைக் கூர்ந்து நோக்கினார். மெளன காக இருந்தார். திடீரென்று, 'நாமதான் போறதுக்குப் பயப்படுதமே தவிர, அப்படி அஞ்சும்படியா அங்கே ஒண்ணு மில்லே. ஆனந்தக்குறிச்சி வாழ்கையை விட அற்புத மாகத்தான் இருக்கும் அங்கே...' என்று பேசலானார். அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று பெரிய பிள்ளைக் குப் புரியாமல் இல்லை. ஆயினும், எதுவும் அறியாதவர் போல, எங்கே? எந்த இடத்தைச் சொல்லுதீக என்று கேட் டார் அண்ணாச்சி. மேலேதான். சொர்க்கத்திலேதான்!” ‘அப்படியா? ‘அண்ணாச்சி இந்த வீட்டையும் மனையையும் ஊரை யும் எப்படிடா விட்டுப்போட்டுப் போறதுன்னு தயங்கிக் கிட்டே கிடக்கிறாப்போல தெரியுது. அப்படி பயப்படத்