பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வல்லிக்கண்ணன் கதைகள் தேவையேயில்லை. உங்களுக்காகப் பெரிய பங்களா, சொத்து சுகம் எல்லாம் அங்கே காத்துக்கிட்டிருக்கு. தினம் பாயசமும் வடையுமா விருந்துச் சாப்பாடுதான். அண்ணாச் சிக்குச் சர்க்கரைப் பொங்கல் பிடிக்குமே? அது அங்கே ரொம்ப அற்புதமாகக் கிடைக்கும். நெய் கமகமன்னு வடிய பிரமாதமான ருசியோடும் மணத்தோடும் - என்ன சுவை! என்ன சுகம்! ... அவர் நாக்கிலேயே தண்ணிர் சுரந்து வழியலாயிற்றோ என்னவோ, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டார் பாலுப் பிள்ளை. அந்தச் சமயம் வாசனை எங்கும் பரவ சூடான வடை களை எடுத்துவந்து இருவர் முன்பும் வைத்தாள் அறம் வளர்த்தாள். உள்ளே போய் வழக்கமான காப்பி'யைக் கொண்டு வந்தாள். போனாள். - இதைவிட ருசிகரமான, ஆளையே தூக்கிட்டுப் போகும் :படி வாசம் அடிக்கும் வடைகள் உங்களுக்குப் பரிமாறப்படும் அண்ணாச்சி! கவலையே வேண்டாம் என்றார் பாலுப் பிள்ளை. பிறகு, குரலைக் கொஞ்சம் தணித்துக் கொண்டு பேசினார். 'இன்னொரு விசயமில்லா. அறமளத்தா உங்களுக்கு எல்லா சேவையும்தான் பண்ணுதா. இல்லேங்கலே. ஆனா, அங்கே உங்களுக்காகக் காத்திருக்கிற சுந்தரிகளை நெனைக் கிறபோது-என்ன இருந்தாலும் இவ வயசானவ தானே! - அதுக...ஆஹ!...அண்ணாச்சி, கிருஷ்ணபுரம் கோயில்லே ரதி சிலை இருக்குதே அதைவிட அழகா, ஒவ்வொரு மார்பும் பிரமாதமா, சொகுசு சுந்தரிகள், சிங்காரவல்லிகள், உங்க வ-8