பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 122 ஒரு சமயம் அவள் காய்ச்சலில் படுத்து எழுந்த பிறகு பொதுவாகவே மருமகள்கள் அவளை ஒதுக்க விரும்பி னார்கள். அத்தை மேல்வலி, தலைவலி என்று அடிக்கடி சுருண்டு படுக்க அவாவியதும், மருமகள்.மாரின் கவலையும் பயமும் வளரத் தொடங்கின. இவளுக்கு பண்டுவம் செய்யவும் பாடு பார்க்கவும் யாருக்கு முடியும்? வீண்செலவும் வெட்டி வேலையும் என்று அவர்கள் கருதலாயினர். நம்ம வீட்டை விட்டு சீக்கிரம் போய்த் தொலைஞ்சால் சரிதான் என்றும், மறுபடி நம்ம வீட்டுப் பக்கம் தலைகாட்டாமல் இருந்தால் ரொம். நல்லது என்றும் அவர்கள் எண்ணினார்கள். முன்பு அத்தை வெளியூருக்குப் போகிறேன் என்று சொன்னதும், இந்தா அத்தை செலவுக்கு வச்சுக்கோ' என்று இரண்டும் மூன்றும் ரூபாயாக அளித்து மகிழ்ந்த வீட்டுக்காரர்கள், வர வர மாறிப் போனார்கள். அத்தை யாக வாய் திறந்து கேட்கட்டுமே என்று இருந்தார்கள். அப்படி அவள் கேட்டாலும், இந்த மாசம் எங்களுக்கே பணமுடை, அத்தை. கையிலே ரூபாயே இல்லை’ என்று சொல்லி எட்டனா, கொடுத்து அனுப்பினார்கள். கை மாற்றாக ஒன்று இரண்டு வாங்கியவர்கள், அதைச் செள கரியமாக மறந்து விடுவதில் அக்கறை காட்டினார்கள். இப்படி பலப் பல. இந்த ரக மருமகள்களில் ஒருத்தியாகத்தான் இருந்தாள் மீனம்மா. இயல்பாகவே நோஞ்சான் ஆக விளங்கிய அவ ளுக்கு அத்தையின் வருகையும், வீட்டோடு தங்கி மாதக் கணக்கில் பரிவுடன் சகல வேலைகளையும் செய்து, அவளை உட்கார்த்தி வைத்து உபசரித்துப் பணிவிடைகள் புரிந்ததும் தல் அதிர்ஷ்டங்களாகத் தோன்றின.