பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 124. போல, அத்தையையும் அகற்றி அப்பால் தள்ளி விடுவதில் எல்லோரும் ஆர்வம் உடையவர்களானார்கள். அத்தை வந்து ஒரு வருஷத்துக்கும் மேலாகிவிட்டது. அவள் அடுத்த இடத்துக்கு நகரும் யோசனை இருப்பதா கவே தெரியவில்லை. அவளை முகமலர்ச்சியோடு ஏற்று தங்க அனுமதிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததால், கொஞ்சம் பிரியமாக இருக்கிறவர்கள் வீட்டில் அதிக காலம் "டேராப் போடவே ஆசைப் ப்ட்டாள் அத்தை. முன்னே மாதிரி ஊர் ஊராத் திரியமுடியல்லே சவம். ஒரு இடத்திலே நிலையா இருந்து, கடைசி அழைப்பு வந் ததும் ஒரே பயணமாப் போய்ச் சேரவேண்டியது தான். அது எப்ட் வருதோ!' என்று அத்தை கூறுவதும் வழக்கமாகிவிட் ه الزيتي سسة மீனம்மா அவளிடம் அவ்வப்போது கேட்டு வைத். தாள்: “தென்காசிக்குப் போகலையா அத்தை? முன்னே விக்கிரமசிங்கபுரத்துக்கு அடிக்கடி போவையே, இப்ப போகவே காணோம்? ஆழ்வா திருநேலியிலே கல்யாணம் நடக்குதே, அங்கே போகலையா? ... மாறாந்தைக்குப். போகப் போறியா?...' - அது போன்ற சந்தர்ப்பங்களில் தான் அத்தை தனது 'ஆசை'யை வெளியிட்டாள். அது மருமகள் மீனம்மா ளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. 'அத்தை நம்ம வீட்டிலே செத்துக் கிடந்தா நம்மை அல்லவா பொறுத்து விடும் செலவு? நாம என்ன மூட்டை கட்டியா வச்சிருக்கோம்? அத்தை கிட்டே சொல்லிப்போட வேண்டியது தான் - வேறே எங்காவது போய்ச்சேரு,