பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#31 வல்லிக்கண்ணன் கதைகள் அங்கெல்லாம் வவ்வால்கள் சஞ்சரிப்பது சரிதான். இந்த அறைக்குள் எதுக்காக வரவேண்டும்? மாதவன் மனம் கேட்டுக் கொண்டது. அவனுக்கு பதி லும் புரிந்ததுதான். கொசுக்கள் நிறைய, ஒவ்வொன்றும் தண்டிதண்டியாய், எவ்வளவு பெரிசு ஒவ்வொரு அறையிலும் கொசுக்கள் வாசம் செய்தன. அவற்றைப் பிடித்துத் தின்பதற்காக வவ்வால் வீட்டினுள், இருட்டில், அறைதோறும் சஞ்சரித்தது. இந்த அறைக்கும் வந்தது. இது ஒதுக்கமாய், அமைதியாய், ஆள் அரவமற்று இருந்தது. அது தங்குவதற்கு வசதியாகப் பட்டி ருக்கும். வவ்வாலுக்கு வசதி, அவனுக்குத் தொல்லை. - ஒவ்வொரு சீசனில் ஒவ்வொன்று தொல்லை கொடுத் துக் கொண்டுதான் இருக்கிறது. நெல் இருக்கிற காலத்தில் எலி... குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்கிற சீசனில் குருவி கள், வைக்கோலும் புல்லும் துரும்புகளும் கொண்டுவந்து அசிங்கப்படுத்தும். மழை பெய்தால், கறையான்கள் உயத் திரவம். எப்பவும் கொசுத் தொல்லை. அதோடு வவ்வால் வேறு. மாதவன் அலுத்துக் கொண்டான், கொசுக்கடி தூக்கத் தைக் கெடுத்த ஒரு இரவில், அவனுக்கு மேலாக விர்ர் - பிர்ர் என்று சிறகோசை எழ வவ்வால் அறை நெடுகப் பறந்து திரிவதை அவன் உணர்ந்தான். இன்னிக்கு அதுக்கு நல்ல வேட்டைதான் என்று திண்ன்ப்பு அவன் மன்சில் நெளிந்தது. -