பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重4氯 வல்லிக்கண்ணன் கதைகள் 'நாலு நாள் தானாச்சு. இன்னமே இங்கேயேதான் இருப்போம், என்று அவள் சொன்னாள். உடனேயே திடுமென நினைத்துக்கொண்டவள் போல, நேரமாச்சு நான் போகணும் என்று அறிவித்தாள். குதித் துக் குதித்து ஒடிப்போனாள். வீட்டை நோக்கி அவள் போவதையே பார்த்து நின்றார் அவர். சிறுமி அந்தச் சிறிய வீட்டினுள்தான் போனாள். இந்தப் பிள்ளையோட அம்மாவுக்கு ஏதாவது சீக்காக இருக்கும். ஆரோக்யம் தேடி இங்கே வசிக்க வந்திருப்பாள் என்று அவர் எண்ணிக் கொண்டார். அதன் பிறகு சுந்தரம் அந்தப் பக்கம் உலா வந்த போதெல்லாம் அச்சிறுமியைத் தவறாது சந்திக்க முடிந்தது. அவள் பெயர் உஷா என்றும் தெரிந்தது. உஷா அழகான பெயர். உதயம் போல் ஒளியோடு, கலகலப்பாக, ஜீவத்துடிப்போடுதான் இந்த குழந்தையும் இருக்கிறது. விடியற்காலத்தின் பொன்னொளி இதன் கண்களில் மின்னுகிறது. இதன் சிரிப்பில் பளிரிடுகிறது. ஒளியின் வைரரேகை மாதிரித்தான் இதன் உருவமும் இருக் கிறது. இப்படிக் கவிதைப் பேசிக் களித்தது அவர் மனம். ஒவ்வொரு சத்திப்பின்போதும் உஷா அவருடைய ஆச்சர் யத்தை அதிகப்படுத்தி வந்தாள். எப்பவும் அவள் தனியாகத் தான் காணப்பட்டாள். சதா சிரித்த முகமாகவே காட்சி தந்தாள். அவளுடைய சின்ன வாய் எப்போதும் வார்த்தை களை கலகலப்பாக அள்ளித் தெறிக்கும் ஊற்றாக விளங்கியது. உஷாவுக்கு பூக்களின் மீது அதிக ஆசை. சுற்றித் திரிந்து ஆவாரஞ் செடிகளின் பொன்னிறப்பூக்களை அதிகம்