பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 158: வானத்திலே நட்சத்திரங்கள் இல்லை. கொலைப்பசி கொண்ட ஓநாய்க் கூட்டங்கள் போல மேகங்கள் திரிந்து கொண்டிருந்தன. பூமியில், அந்தகாரத்தினுள் சுவர்கள் தரும் அடக்க மான இருளினுள்ளே, விதவிதப் பசிகளைத் திருப்திப்படுத்து வதிலும் திருப்திப்படுத்த முடியாத ஏக்கத்திலும் மனித. உருவங்கள் புரளும் வேளை. அந்நேரத்தில் அவன் தனியனாய், கொலையின் உலவும் உயிர்ப்பிம்பமாய், கொலையின் நினைவே ஆகி, ஒரு மனித ஓநாய் போல நடந்தான். அவன் கண்களிலே கொலை இருந்தது. அவன் கருத்திலே கொலை நெளிந்தது. மூடிமூடித் திறக்கும் அவனது கைகளிலே கொலை நர்த்தனமிட்டுக் கொண் டிருந்தது. அவன் யாரையாவது கொலை செய்திருக்க வேண்டும். அல்லது இனி எவரையாவது அவன் கொலை செய்யலாம். கொலை அவனைச் சுற்றிக் கவிந்திருந்தது. அதே நினைப். போடு நடந்து கொண்டிருந்தான் அவன். து.ாற்றல் அவனுக்குப் பெரிதல்ல. மனித இனத்தின் வசைத் தூற்றல் தான் அவனை வதைத்தது. சுட்டது. உணர்வுக் கொதிப்பு உண்டாக்கியது. ஒளியை வட்டங்களாக வரைந்து காட்டும் மின்சார விளக்கின் கீழே அவன் நடக்கும் போது, அவன் மூஞ்சி பளிச்சிட்டது. குரூரத்தின் சித்திரம் அது. மூக்கு சப்பையாக இருந்தது. மேல் உதடு முயல் உதடு போலிருந்தது. பற்கள் வெளியே நீண்டிருந்தன.