பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 வல்லிக் கண்ணன் கதைகள் தான் அவன் பேரிலும் விட்டெறிந்தார்கள் மனிதர்கள். எவர் வீட்டிலாவது போய் குடிக்கத் தண்ணீர் கேட்டால் கூட, எரிந்து விழுந்து விரட்டினார்களே தவிர இன்முகம் காட்டி வரவேற்றதில்லை. இதனால் எல்லாம் அவன் உள்ளம் குமைந்து புழுங்கியது. ஜனங்களை வெறுக்கலானான். குரூரமானவர்களும் கொடுநோய்க்காரர்களும் பணபலத் தினால் மிகுந்த செல்வாக்குடன் இருந்து, பலரோடும் சகஜ மாகப் பழகி வாழ்வதை அவன் உணராமல் இல்லை. பகட் டான ஆடை அணிகளாலும் வாசனைப் பூச்சுகளாலும் அழகு படுத்திக்கொண்டு, அவர்கள் மேனாமினிக்கிகளோடும் சர சாங்கிகளோடும் சிரித்துப் பேசிக் களிப்பதை அவன் அறியா மல் இல்லை. அவன் அவர்களது நிலையில் இல்லாத காரணத்தால் அவன் ஏழையாய் திரிந்ததனால், பெண்கள் கூட அவனை வெறுத்தார்கள். காசுக்கு உடலை விற்கத் தயங்காத தொழிற்காரிகளும், இன்பத்துக்காக எவனோடும் போகத் தயாராகி விடுகிற காமவல்லிகளும் கூட அவனைக் கண்டு முகம் சுளித்தார்கள். வெறுத்துப் பேசி விரட்டினார் கள். ஆகையினால் ஜனத்துவேஷியாய் வளர்ந்துவிட்டான் அவன். அன்புக்காக, அனுதாபத்துக்காக, அவன் உள்ளம் ஏங் கிய தினங்கள்தான் எத்தனை? தனது தன்மையை எண்ணி எண்ணிக் குமைந்து புழுங்கிக் குமுறிக் கொதித்து, பித்தனாய் பேயனாய் வெறியனாய் மாறிவிடவில்லையா அவன்? பழி வாங்கும் பண்பினன் ஆயினான். 'கொலை பண்ணு! கண்டவனை எல்லாம் கொல்லு! உன்னை வெறுக் கும் மனித இனத்தில் வந்தவர்களைக் கொல்லு மூட்டைப் பூச்சிகளை நசுக்குவது போல, சிலந்தியைக் கொல்லுவது போல, தேள்களையும் கரப்பான் பூச்சிகளையும் அடித்துக் கொல்வது போல- கொல்லு!... கொல்லு!... கொல்லு!’