பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 வல்லிக்கண்ணன் கதைகள் மற்றவர் அவனை ஏற இறங்கப் பார்த்தார். எங்கே இருந்து வாறிங்க?' என்று கேட்டார். டவுணிலேயிருந்து' 'டவுன் தான் உங்க ஊரா?? 'இல்லை என்று கூறி சுயம்பு தனது ஊரின் பெயரை சொன்னான் 'உங்க பேரு என்ன?" ஒரு அந்தியர் தன்னை குறுக்கு விசாரணை செய்வது சுயம்புவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் தன் பெயர் ஒரு மாதிரி யாக இருப்பதாக மற்றவர்கள் எண்ணுவார்கள் என்ற சந் தேகம் அவனுக்கு எப்பவும் உண்டு. அதனால் அவன் தன் பெயரை சொல்ல விரும்பவில்லை. ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்வாதே’ என்ற பழமொழி அவன் உள்மனசில் சதா வேலை செய்து கொண்டிருந்தது. 'நான் வகுளபூஷணத்தின் நண்பன். அவர் வீடு எந்தப் பக்கம்னு சொன்னால்...' என்று இழுத்தான். "நீங்க வர்றதா அவருக்கு லெட்டர் போட்டிருந்தீங்களா?” இல்லே. திடீர்னு டவுனுக்கு வந்தேன். அப்படியே இங்கே வந்து அவரையும் பார்த்து விட்டுபோகலாமேன்னு..." "அது சரி. வகுளபூஷணம் ஊரிலே இல்லே." திக்கென்றது சுயம்புவுக்கு. ஊரிலே இல்லையா? என்று பதறினான். - "அவர் வெளியூர் போயி ஒரு மாசத்துக்கு மேலே ஆச்சு . திரும்பி வர நாளாகும்.'