பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலலிக்கண்ணன் 17C; வகுள பூஷணம் வீடு எங்கே இருக்கு?’ என்று சுயம்பு கேட்கவும், வகுளபூஷணமா?- எந்தத் தெரு' என்று இழுத் தது திண்ணைக் குரல். "தெருப்பேரு தெரியாது. அன்பகம்னு விலாசம். வகுள பூஷணம், அன்பகம்னுதான் தபால்களை அனுப்புறது...' "அப்ப தபாலாபீசிலே போய் கேளுங்க... அந்தா ரெண் டாவது லைட் போஸ்டு கிட்டே ஒரு தெரு போகுதே. அதிலே கடைசியிலே இருக்குது தபாலாபீசு என்று வழி காட்டினார். திண்ணை நபர்களில் ஒருவர். 'இப்போ தபாலாபீஸ் திறந்தா இருக்கும்? 'அடைச்சுத்தான் கிடக்கும். ஆனா உள்ளே ஆள் இருக் கும். அது தந்தி ஆபீசும் கூட. அதனாலே எப்பவும் அங்கே யாராவது ஒருவர் இருப்பாரு' என்று அருள் புரிந்தார் மற்ற வர். சுயம்பு போனான். தபாலாபீஸ் கதவை தட்டினான். ஸார், லார்!’ என்று. கத்தினான். "யாரது?’ என்று குரல் வெடித்தது. உள்ளே மின்விளக் கின் ஒளி படர்ந்தது. கதவு திறக்கப்பட்டது. வெளியே பாய்ந்து சிரித்த ஒளியோடு ஒருவர் எட்டிப் பார்த்தார். ‘என்ன?, என்ன வேணும்? அதிகாரக் குரல். வகுளபூஷணம், அன்பகம். அவரைப் பார்க்க வந்தேன். அவர் வீடு எங்கே இருக்குன்னு தெரியலே. இங்கே விசாரித், தால் தெரியும்னு ஒருவர் என்னை இங்கே அனுப்பினார்."