பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 174 சுயம்பு பக்கத்தில் போய் பார்த்தான். கதவில் தொங் கிய பெரிய பூட்டை இழுத்துப் பார்த்தான். இப்படி ஆகும் என்று அவன் கற்பனை கூடப் பண்ணவில்லை. ஆகிவிட்டது: இனி என்ன செய்ய?

இந்த ஊரிலே ஒட்டல் எதுவும் கிடையாதோ?’ என்று அவன் முருகனிடம் கேட்டான்.

கிளப்புக் கடையா...ஊகும். இரண்டு டீக்கடை உண்டு, பஸ்டாப்பிலே ஒண்ணு, வடக்குத் தெருவிலே ஒண்னு... ரெண்டுமே ஏழு, ஏழரைக்கெல்லாம் குளோஸ் ஆகிவிடும்’ என்று முருகன் விவரித்தான். கோயில்... பூசை பண்ணுகிற ஐயர் வீடு? சாப்பிட ஏதா வது கிடைத்தால், சாப்பிட்டு விட்டு, கோயிலில் படுத்துக் கொள்ளலாம்...” "அதெல்லாம் வசதிப்படாது ஐயா, முன்னெக் கூட்டியே சொல்லியிருந்தால், ஐயரு ஏதாவது ரெடி பண்ணித் தரு வாரு திடீர்னு போனா எதுவும் கிடைக்காது. நீங்க கடைசி பஸ்ளைப் புடிச்சு டவுனுக்குப் போறதுதான் நல்லது என்று முருகன் சொன்னான். சுயம்புலிங்கம் தயங்கித் தயங்கி நின்றான். சிறிது நகர்ந்தான். குழம்பினான். அவருக்கு லெட்டர் எழுதி, அவர் ஊரிலே இருப்பாரா என்று தெரிந்து கொண்டு வந்திருக் கணும். நான் முட்டாள்தனம் பண்ணிவிட்டேன்’ என்று சுய விமர்சனம் செய்தது அவன் மனம். . வீடு இருந்த ஒதுக்குப் புறத்தை விட்டு நடந்து தெரு வுக்கு வந்தார்கள் இரண்டு பேரும்.