பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.175 வல்லிக்கண்ணன் கதைகள் தெருவில் ஒரு ஒளிவட்டம் நகர்ந்து வந்தது. டார்ச் லைட் வெளிச்சம். முருகா! என்ற குரல் வந்தவரைக் காட்டிக் கொடுத்தது. "லார்?’ என்றான் முருகன். போனவங்களைக் காணோமே; இருட்டு நேரத்திலே, ஆள் இல்லாத வீட்டிலே என்ன செய்றாங்கன்னு பார்க்க வந் தேன்’ என்றார் அலுவலர். முன்னே விரைந்து சென்ற முருகன், அவரு கோயிலைப் பற்றி விசாரித்தாரு, ஐயரு வீட்டைக் கேட்டாரு என் றான். சிலை திருடுகிற நோக்கம் இருக்குமோ? ராத்திரி வேளையிலே, இவ்வளவு நேரத்துக்கு வந்து... மற்றவர் மெதுவாகத்தான் பேசினார். இருப்பினும், சொற்கள் சுயம்பு வின் காதுகளைத் தொடாமலில்லை. 'வாறேன், சார். பஸ் கிடைக்கும்னு நினைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, சுயம்பு வேகமாக நடந்தான். 'அவன் பஸ்சுக்குத்தான் போறானான்னு கவனி முருகா!' என்று கூறிவிட்டு, திரும்பி நடந்தார் மற்றவர். சுயம்புலிங்கம் பஸ் வரும் ரஸ்தாவை நோக்கி விரைந் தான். எங்கிருந்தோ ஒரு நாய் குரைத்தது. அதை ஏற்று, மேலும் இரண்டு மூன்று நாய்கள் குரைத்தன. அவன் வேகமாக நடக்க அஞ்சினான். நாய்கள் பாய்ந்து வந்து தாக்கக்கூடும் என்ற பயம் அவன் இதயத்தில் உதைத் இது.