பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் . 176. சிறிது தூரம் இருக்கையில், பஸ் சீறிப் பாய்ந்து வேக மாக முன்னேறிச் சென்றது, அவனுக்குத் தென்பட்டது. அதன் உறுமல் கனத்துத் தேய்ந்து காற்றில் கலந்தது. “ஓடிப் பிடிக்கக் கூடிய தூரம் இல்லை? என்றது மனம். ஓடினால் நாய்கள் கடிக்க வந்தாலும் வரும் என்றும் அது பயந்தது. வேறு வழியில்லை, நடக்க வேண்டியதுதான். இரண்டு மைலுக்கப்பால், திருப்பத்தில், ரொம்பப் பேர்கள் இறங்கி னார்களே, ஒரு தொழில் நகரம் ஏகப்பட்ட வெளிச்சமும் பர பரப்பும் கடைகளும் உயிரியக்கமுமாக இருந்ததே ஒர் இடம்அங்கே போனால், இராப் பொழுதுதைக் கழிக்க ஏதாவது வழி பிறக்கும் என்ற எண்ணத்தைத் தாலாட்டிய மனசோடும் பசி கிள்ளும் வயிறோடும், சோர்வு நடை நடந்தான் சுயம்பு விங்கம். 'யாதும் ஊரே என்ற சொற்கள் அவனுள் இப்போது மீண்டும் ஒலித்தது. அதைத் தடுத்து பெரிய கேள்விக் குறி ஒன்றை வளைத்தது மனக் குறளி. ■ "இளங்தமிழன்' - செப்டம்பர்-அக்டோபர் 1989