பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 வல்லிக்கண்ணன் கதைகள் ‘அண்ணாச்சி பேச்சு சொல்லவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கு. ஆனால் செயலுக்கு சரிப்பட்டு வராது’ என்று ஓங்கி அடித்தார் ஊர்ப் பெரியவர். அத்தோடு விஷயம் முடிந்தது என்று பலரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போனார்கள். இரவில் துரங்கப் போனார்கள். மறுநாள் காலையில் அவர்களுக்கு அதிசயம் காத்திருந் தது. வாய்க்காலுக்கும் வயல் பக்கமும் போனவர்கள்தான் முத லில் அதைப் பார்த்தார்கள். தண்ணிர் எடுக்கவும் குளிக்க வும் வந்த பெண்கள் பார்த்தார்கள். அனைவரும் ஆச்சரியப் பட்டு ஆகா என்றார்கள். விண்ணைத் தொட முயல்வது போல் உயர்ந்து நின்ற அரச மரத்தின் உயர் கிளை மீது, ஓங்கி நிமிர்த்து நின்ற ஒரு மூங்கில் கழியில் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. யார் இரவோடு இரவாக அதைக்கட்டி இருக்க முடியும்? ஒருவராய், இருவராய், பலராகி, கும்பலாய் கூடிவிட்ட ஊரே அதிசயித்தது அதைக்கண்டு. மெதுவாக வந்தார் அண் னாச்சி. அண்ணாச்சி, உங்க சொல்லை செயலாக்கிப் போட்டீங்களே! எப்படி அண்ணாச்சி முடிந்தது உங்க ஆளாலே?" பலரின் சந்தேகமும் ஒருவரின் கேள்வியில் ஒலி செய் தது. அண்ணாச்சி பெருமையாய் கூட்டத்தைப் பார்த்தார். "எல்லாம் நம்ம பாண்டியின் வேலைதான் என்றார்.