பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 196. பூவுலிங்கத்தின் தந்தை பலவேசம், மகன் பட்டணம் போன மறுவருடமே மண்டையைப் போட்டு விட்டான். அவன் காரியம் எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் பட் டணத்தில் இருந்தவர்களுக்கு விஷயம் தெரிந்தது. பூவுப் பயலுக்கு அண்ணன்களும் தம்பிகளும் நிறைய இருந்த தால், அப்பனின் இறுதி யாத்திரைக்கு வழி அனுப்பிவைக்க இந்த புத்திர பாக்கியம் வந்தே ஆக வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. r இரண்டொரு வருடங்களில் தாயும் சிவபதம் அடைந் தாள். இந்த மகனின் துணை அப்போதும் தேவைப்பட வில்லை. 'நான் ஊரைவிட்டு வந்து அஞ்சாறு வருசம் ஆகுது. அங்கே போகணும்னு எனக்கு ஆசையா இருக்கு, ஒரு தடவை போயிட்டு வாறேனே" என்று அவன் பிள்ளைவாளி டம் கெஞ்சினான்.

  • நீ என்னடா சுத்தப் பைத்தியக்காரனா இருக்கிறே! இது ஊரு இல்லாமல் காடா? அந்தப் பாடாவதிப்பய ஊரிலே உனக்கு என்ன வச்சிருக்கு? இங்கே கிடைக்கிறதை சாப்பிட்டுக் கொண்டு பேசாமல் கிடப்பியா? ஊருஊருன்னு: தொணதொணக்கிறியே! என்று கைலாசம் பிள்ளை உப தேசித்தார்.

அவன் வருகையை அவனுடைய அண்ணன்மாரும் விரும்பவில்லை. பூவு, எசமான் கண்காணிப்பில் இருக்கி, படியே இருக்கட்டும். இங்கே இப்ப ரொம்பவும் சிரம தசை. அவன் நல்லபடியா வாழ கடவுள் வழிகாட்டி விட் டதுக்கு நாங்கள் சந்தோஷப்படுகிறோம்" என்று பெரிய அண்ணன் அறிவித்துவிட்டார். -