பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 வல்லிக்கண்ணன் கதைகள் கென்று யாராவது வந்து போனார்கள். அவர்கள் பேச்சும், சிரிப்பும், கோப வெடிப்புகளும் அந்த வீட்டுக்கு ஜீவன் தந்து கொண்டிருந்தன. இப்போது அவர் இல்லை. வீட்டின் ஜீவன் ஒய்ந்து விட்டது. அவள் ஒடுங்கிப் போனாள். தன்னுள் தானே குறுகிக் கொண்டிருக்கும் சிற்றொளி மாதிரி, ஒரு சுவரின் ஒரமாக ஒண்டி அமர்ந்திருந்தாள் அவள். பெரிய கூண்டினுள் ஒரு மூலையில் சேர்ந்து உட்கார்ந்தி ருக்கும் சிறுபறவையின் தோற்றம் அவள் மனசுள் சலன மிட்டது. அவள் சதா காலமும் இப்படி ஒதுங்கி, ஒய்ந்து, செய்வதற்கு எதுவும் இல்லாதவளாய் பேசுவதற்கு எதுவும் அற்றவளாய் பொழுது போக்கிற்கும் கவன ஈர்ப்புக்கும் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று கூட இல்லாது, தனி மையைச் சுமந்து கொண்டு உட்கார்ந்திருப்பாள். அன்றாட அலுவல்களையும், அவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்த பிறகு உட்கார்ந்து அலுத்துப் போனால், படுத்துக் கிடப்பாள். அவளது வாழ்க்கையின் பெரும் பாகம் ஒரு தினுசாகக் கழிந்து விட்டதென்றால் எஞ்சியுள்ள பாகம் வேறு விதமாக ஊர்ந்து நகரக் கனத்துக் கவிந்து கிடக்கிறது. ராத்திரி நேரங்களில் ஒருவிதமான பயம் கூட இவ ளுக்கு துணை இருக்கும் - இந்த இருண்ட சூழலில்; தன்னந் தனித்த பெரிய வீட்டில் என்று அவன் எண்ணிக் கொண் டான். அவள் முகத்தைப் பார்த்தான். ஈரப் பசையை இழந்து விட்ட முட்டகோசு மாதிரித் தோன்றியது அது. கண்கள் ஆழத்தில் கரை காண முடியாச் சோகம் மினு மினுப்பதாகப் பட்டது. அவன் மனப் பதிவு, மறதிப் புழுதியில் மங்கிப் போய் விடாத ஒரு இளமைத் தோற்றத்தை இப்போது அவனுள்