பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

جي تيسيم ، 8 வல்லிக்கண்ணன் 212 உயர்ந்து, விசாலித்து பல அறைகளைக் கொண்டிருந்த அந்தப் பெரிய வீடு இருண்டிருந்தது. சன்னல் கதவுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. ஒளிவீச்சு உள்ளே புக இயலாது வெளியிலேயே முடங்கிக் கிடந்தது. அந்த வீடு அவளது வாழ்க்கையின் ஒரு ஸிம்பாலிசம்’ (குறியீடு) போல அவனுக்குப்பட்டது. உள்ளே போனான். உட்காரு’ என்று அவள் உப சாரமாகக் கூறவும், ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். சூழ்நிலையின் வெறுமை அவன் பிரக்ஞையில் உறுத்தியது. விசாலமான அறையின் பெரிய சுவர்கள் வெறுமையாய் வெளிரிட்டு நின்றன. அழகு செய்யும் படங்களோ, விகாரப் படுத்தும் காலண்டர்களோ, விதம் விதமான மனிதர்களின் போட்டோக்களோ இல்லாத வெறும் சுவர்களின் ஒரமாக பெரிய பெரிய நாற்காலிகள் கிடந்தன. வெறுமையை அதிக மாய் எடுத்துக் காட்டும் கருவிகள் போல. அங்கே உயிர்ப்பின் சலனங்கள் இல்லை. உணர்ச்சிகளின் கலீரிடல்கள் இல்லை. குழந்தை இயக்கங்களின் சிதறல்கள் இல்லை. இயற்கை ஜீவன்களின்-குதித்துக் கு மாளியிட் டுக் கூச்சல் போட்டுத் திரியும் குருவிகளின்-உற்சாகச் சிரிப் புகள் கூட இல்லை. சுத்தம், ஒழுங்கு, அமைதி கொலு இருந்தன. நெடுகிலும். போன முறை அவன் வந்திருந்த போது- ஒன்றிரண்டு வருடங்கள் ஓடி விட்டன இடைவேளையாக-அவள் கணவன் இருந்தார். சீக்காளியாய்க் கிடந்தார், அந்த அறையின் ஒரு அங்கம் போல. ஒரு நோயாளியைச் சார்ந்து இருக்கக் கூடிய அனைத்தும் அங்கே இருந்தன. அவர் சதா ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். அவரைப் பார்ப்பதற்