பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் கதவு தட்டப்பட்டதும் அவள் வந்தாள் திறப்பதற்காக. நகர்ந்து வருகிற ஒளிக்கோடு மாதிரி. கம்பிகள் இடைவெளியிட்டிருந்த அளிக் கதவு அவளை அவன் கவனிப்புக்குப் புலப்படுத்தியது. வெள்ளை ஆடை பளீரென்று அவன் பார்வையில் பட்டது. அவள் கதவருகில் வந்தாள். அழுக்கற்ற வெண்மை யான வெள்ளைச் சீலையில், ஒரு புனிதத்தின் வடிவமாகப் பிச்சிப்பூ போல் வெளிர் எனத் துலங்கிய மெல்லிசான ரவிக்கை அவளது வெண்மையை அதிகப்படுத்திக் காட்டியது. வாட்டமுற்ற வெண்தாமரை போல் தென்பட்டது அவள் முகம. கதவருகில் நின்றாள். சோகத்தின் பிம்பமாக, உட் புறத் தாள் நீக்கி, கதவைத் திறந்து, 'ஐயா, வா என்று கூறி ஒதுங்கி நின்றாள் எளிமையின் உயிர்ப்பாக. இனிய, எளிய, தனக்கெனத் தனிவடிவமும், வசீகரமும் பெற்ற வெண்மையான புனித நந்தியாவட்டை மலரின் நினைப்பு அவன் மனதில் படர்ந்தது. 'வா, உள்ளே வா-அவள் குரல் எப்போதும் போல் மென்மையாக ஒலித்தது. அதில் சோகம் இழையோடியிருப்பு தாக அவன் கருதினான்.