பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 வல்லிக்கண்ணன் கதைகள் விட்டார்கள். ஆனாலும், அவளைப்பற்றி மனம் போன போக்கில் பேசி மகிழத் தயங்கவில்லை. அதெல்லாம் ரஞ்சிதத்துக்குத் தெரியாது. இதுவும் ஒரு ஊரா? இங்குள்ள சனங்களும் ஒருசனமா? தரித்திரங்கள். நாகரிகம் தெரியாத முண்டங்கள் என அவள் கரித்துக் கொண்டிருந்தாள். அவள் போக்கு புருசன்காரனுக்கு வெறுப்பு தர ஆரம்பித் தது. "நான் நினைச்சிருந்தால் நல்ல சினிமா ஸ்டாரு ஆகி யிருப்பேன், தெரியுமா? என்னை சினிமாவிலே சேர்த்து விடறதாக் கூட ஒருவர் முன்வந்தாரு. அதுக்குள்ளாரே எனக்கு இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டாங்க" என்று அவனிடமே அவள் ஒரு சமயம் கூறினாள். "யாருடி அவன்?' என்று உறுமினான் குப்புசாமி. அவள் சொன்னாள். அவள் பேரில் அவனுக்கு சந்தேகம் தான் ஏற்பட்டது. அவளை உறுத்துப் பார்த்தான். 'எனக்கு நடிக்கத் தெரியாதுன்னு நினைக்கிறேளோ? எனக்கா தெரியாது? நான் ஸ்கூல்லே படிச்சப்போ, ஆண்டு விழா நாடகங்களிலே நடிச்சிருக்கேன், தெரியுமா?’ என்று உற்சாகமாகவும் பெருமையோடும் பேசினாள் அவள். அவள் எதிர்பாராதது நடந்தது. அவள் கன்னத்தில் பளாரென ஒரு அறை விழுந்தது. 'எனக்கும் எங்க குடும்பத்துக்கும் கேவலம் உண்டு பண் ணனும்னே நீ வந்திருக்கே! சினிமாவாம், நடிப்பாம்! எவனோ சேர்த்து விடுறேன்னு சொன்னானாம். சாக்கிர தையா இருந்துக்கோ. தப்புத் தவறா நடந்தே உன்னை கொலை பண்ணிப் போடுவேன். எலியைக் கொல்லுற மாதிரி உன்னை ஒழிச்சுக் கட்டிருவேன்' என்று கறுவினான் கணவன்.