பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- சொல்ல முடியாத அனுபவம் சுய்ம்புலிங்கத்துக்கு தீராத மனக்குறை. யார் யாருக்கோ என்னென்ன அனுபவங்கள் எல்லாமோ எதிர்ப்படுகின்றன; தனக்கு ரசமான, ஜோரான, சுகமான அனுபவம் ஒன்று கூட கிட்டமாட்டேன் என்கிறதே என்றுதான். நினைக்க நினைக்க கிளுகிளுப்பூட்டும் இனிய நிகழ்ச்சி கள், சொல்லச் சொல்ல வாயூறும் - கேட்பவர்கள் காது களில் தேன் பாய்ச்சும் - மற்றவர் நெஞ்சில் ஆசைக் கள் ளைச் சுரக்க வைக்கும் - ஒரு சிலரது உள்ளத்திலாவது பொறாமைக் கனலை வீசிவிடும் அற்புதமான அனுபவங்கள். ஐயோ, பேசிப் பேசிப் பூரித்துப் போகிறார்களே பல பேர் இரண்டு பேர் சந்தித்தாலே, கேட்டீரா சங்கதியை! நேற்று...' என்று ஆரம்பித்து சுவாரஸ்யமாக வர்ணிக்கிறார் ஒருவர். போன மாசம் அப்படித்தான், பாருங்க... என்று தொடங்கி அளக்கிறார் மற்றவர். திண்ணைகளிலும், விசேஷ வீடுகளில் கூடுகிறபோதும், சும்மா நாலைந்து பேர் கூடிப் பேசிப் பொழுது போக்குகிற சமயங்களில் எல்லாம் - எப்போதும் எங்கும் எல்லோருக் குமே, சுவையாக எடுத்துச் சொல்வதற்கு ஜிலுஜிலுப்பான அனுபவங்கள் இருந்தன. பலப் பலருக்கும் வாழ்க்கையில் அவை நிறையவே சித்தித்ததாகத் தோன்றின. ஆனால் அவனுக்கு அப்படிப் பெருமையாக, மகிழ்ச்சி யோடு எடுத்துச் சொல்வதற்கு ஒரு மண்ணும் இல்லை.