பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கைப் புலி சொக்கலிங்கம் அப்போதுதான் எழுத உட்கார்ந் திருந்தார். எழுதக்கூடிய மூட் வருவதற்கு எவ்வளவோ நேரம் தேவைப்பட்டது. சும்மா இருந்தும், அதை இதைப் புரட்டியும், கோணல் மாணல் கிறுக்கல்கள் திட்டியும் காலக் கொலை செய்த பிறகு, ஒரு எழுச்சி ஏற்பட்டிருந்தது. எழுதலானார். பேனா வேகமாக இயங்கத் தொடங்கியது. 'தட்'தட்' என்று கதவு தட்டப்படும் ஒசை அவர் அமைதியைக் குலைத்தது. எரிச்சல் வந்தது. யாரது என்று சீறிவிழ எண்ணினார். 'சங்கிலி புங்கிலி கதவைத் திற? சிறு பிள்ளைக் குரல் ராகம் போட்டு இழுத்தது. இங்கே தட்டவில்லையா? சரிதான் என்று அவர் மனம் முணுமுணுத்தது. இருந்தாலும் எரிச்சல் தணியவில்லை. "நான் மாட்டேன் வேங்கைப் புலி! பதில் நீட்டல் எதிர் வீட்டுக் குள்ளிருந்து வந்தது. "ஆட்டுக் குட்டியைக் கண்டளோ? முதல் குரல் ராகம் இழுத்தது. . வ. - 2