பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்பு - ஆயிற்று. எல்லாம் முடிந்துவிடும். விரக்தி, வெறுமை வறட்சி, சூன்யம் எல்லாம் தான்... எதிலும் அர்த்தமில்லை. பயனில்லை. பசுமையில்லை. பாழ்தான்... இந்தப் பாலைச் சூழலில், வறண்ட காற்றுப்போல, அமைதியற்று, அலுவலற்று, வீணுக்குச் சுற்றிச்சுழன்று கொண்டிருப்பதில் அர்த்தமே கிடையாது... வாழ்க்கையில் பிடிப்பு எதுவுமில்லை. பிடித்து வைத்துக் கொள்வதற்குப் பற்றுக்கோடும் ஒன்றுமில்லை... வாழ்விலேயே ஒன்றுமில்லை. ஆழமற்ற பரபரப்பு. அர்த்தமற்ற சுழற்சி. வீண் தொல்லைகள். நிறைவேறாததிறைவேற முடியாத - பாழுங்கனவுகள். ஏக்கப் புகையை நீளவிடும் அல்ப ஆசைகள், உளக்குமைதல், உணர்வுக் குழப்பம், உடல் வேதனைகள்... அர்த்தமற்றவை. அவசியமில்லாதவை. பயனற்ற, பசுமையற்ற, வெறுமை. .