பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 வல்லிக்கண்ணன் கதைகள் காத்தியமில்லை என்றே மற்றவர்கள் கருதினார்கள். அத னால் அவன் ஒதுங்கி வாழ்ந்தான். பிறரால் ஒதுக்கப்பட்டு, தனியாய் வாழ்க்கை நடத்தினான். ஒட்டலில் சாப்பாடு, பொழுது போக்குவதற்குப் புத்தகங் கள். வேலை என்ற பெயரில் என்னவோ எழுதுவது. படம் போடுவது, அலுப்பு ஏற்பட்டால் தெருக்களில் சுற்றுவது, தனி இடங்களில் உட்கார்ந்து விண்ணையும் மண்ணையும் மரத் தொகுதிகளையும் வெறிக்கப் பார்த்துக் கொண்டி ருப்பது, இரவில் ஆழ்ந்து துரங்குவது - இவற்றை ஒழுங் காக, வேளை தவறாது, இயந்திர ரீதியில் செய்து கொண்டி ருந்தான் அவன். தான் மற்றவர்களினின்றும் மாறுபட்டவன், விசேஷ மானவன் என்று அவன் நம்பினான். அதனால் பிறரது வாழ்க்கைப் போக்கு, பிறர் பழக்க வழக்கங்கள் எல்லாவற் றின் மீதும் அவனுக்கு வெறுப்பும் மனக்கசப்பும் ஏற்பட்டி ருந்தன. “தேடிச் சோறு நிதம் தின்று, சின்னஞ் சிறு கதை கள் பேசி எப்படி எப்படியோ காலம் கழித்து, விதி முடிந் தால் சாகும் மனித பிராணிகள் மீது அவனுக்கு அனுதாபம் பிறந்ததுமில்லை. அவர்களது குறைபாடுகளையும் குணக் கேடுகளையும் கண்டு கோபமும் வெறுப்புமே கொண்டான், நாள் ஆக ஆகத் தனிமை அவனைச் சுற்றிலும் கண் லுக்குப் புலனாகாத ஒரு கவசமாய்த் தொங்கலாயிற்று. தனிமையே சுமையாய், வேதனையாய் அவனை அழுத்தியது சினிமா, நாடகம், முதலியவற்றிலே அவன் உற்சாகம் காண முடிந்ததில்லை. சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சி கள், பெரும் கூட்டங்களில் கலந்து கொண்டு அவன் உவகையோ, உத்வேகமோ பெற முடிந்ததில்லை. உயி ரோடும் உணர்வோடும் இயங்கும் ஜனசமுத்திரத்தில் கலந்து