பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ مr* fa ు ஆல்விக்கண்ணன் 38 அவன் பார்வை ஜன்னல்களுக்குத் தாவியது. எல்லா ஜன்னல்களும் தன்றாக அடைக்கப்பட்டிருந்தன . முழுத் திருப்தி, - அவன் கீழே கிடந்த சிறிய ஸ்லிேன் மீது ஏறி நின்றான். கயிற்றை இழுத்துப் பார்த்தான். ஏற்பாடுகள் எல்லாம் திருப்திகரமாக இருந்தன. -நாற்பது வருட காலம் வாழ்ந்து பார்த்தாச்சு. வெறுமை, வறட்சி, சூன்யம் தான். இனியாவது பசுமை இருக்குமா என்று தேடிச் செல்கிறேன். இது தான் நான் எனக்கே அளித்துக் கொள்ளும் பிறந்த நாள் பரிசு விநாயகமூர்த்தி சிரித்துக் கொண்டான். ஒளியற்ற, மனநிறைவற்ற, வறண்ட சிரிப்பு! - கயிற்றின் சுருக்கை நிதானமாக எடுத்து, அமைதியோடு தன் கழுத்தில் மாட்டிக் கொண்டான். அவசரமின்றி, மெது மெதுவாக முடிச்சை இறுக்கினான். சரியான அளவுக்கு வந்து, கழுத்தை முடிச்சு அழுத்தி நெருக்கத் தொடங்கியதும், காலடியில் இருந்த ஸ்டூலை எட்டி உதைத்து விட்டுத் தொங் கினான். அவன் உள்ளத்தில் பதைபதைப்பு இல்லை. உடலில் படபடப்பு இல்லை. அவனுக்குப் பயமோ, குழப்பமோ எதுவுமில்லை. வெகு நாட்களாகச் சிந்தித்து, திட்டமிட்டு, ஒத்திகைகள் நடத்தி. இறுதியாக அவன் எடுத்துக் கொண்ட முடிவுதானே இது பின்னே என்ன? விநாயகமூர்த்தி தனி நபர். தனிரகமான நடிரும் கூட, அவன் மற்றவர்களோடு ஒடடிப் புழகவில்லை, அவனோடு உறவாடி, நட்புக் கொண்டாடி, சகஜமாகப் பேசிப் *ஆதிகுவது