பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனப்பித்து கைலாசத்தின் உடம்பில் ஒரு சிலிர்ப்பு. அவன் கண்கள் தெடுகிலும் புரண்டு, எதிர் மூலையில் பார்வை பதிந்து நின்றன. அப்போது அவன் ரயிலில் போய்க் கொண்டிருந்தான். ஆண்டியின் ஒரு மூலையில், சன்னலோரத்தில் வசதியாக இடம் கிடைத்திருந்தது. மழைக்கால மாலைப்பொழுது. இரவு இறங்கி வரும் சமயம். மழை இல்லை. கருங்கும் என இருள் பரவியிருக்க வில்லை. எனினும் ஒளி அதிகம் இல்லை. அச்சம் எழுப்பக்கூடிய சூழ்நிலைதான். மலைகளும் காடு களும் மண்டிய இடம். பாம்பு மாதிரி, இருப்புப் பாதை தெளித்து வளைந்து செல்கிறது. அங்கே ஒரு சிறு ஸ்டேஷன். அதிலும் ஆட்கள் காத்திருந்து ரயிலில் ஏறத்தான் செய்தார் கள். அந்த வட்டாரத்தில் பலரகமான உழைப்பிலும் ஈடுபடு கிறவர்கள். அந்த வண்டியிலும் சிலர் ஏறினார்கள். பெண்கள். உடலிலோ உடையிலோ நாகரிகத்தின் சின்னங்கள் படியாத வர்கள். உழைப்பாளிகள். இளம் வயசு. அவர்கள் அவசரம் அவசரமாக ஏறினார்கள். உட்கார இடமில்லை. ஆகவே, அங்கேயே கதவருகில் நின்றார்கள்.