பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 வல்லிக்கண்ணன் கதைகள் மூலையில் வசதியாக அமர்ந்திருந்த கைலாசத்தின் பார்வை அவர்களைத் தொட்டது. கதவோரத்தில் நின்ற, ஒருத்தி மீது தேங்கியது. தேக்கங்கட்டையில் செதுக்கி உருவாக்கி கடைசல் பிடித்து மீனுமினுப்பு ஏற்றப்பட்ட சிலை மாதிரி இருந்தாள். சலவை கண்டிராத-அழுக்கு முட்டிப் போன-உளுத்தங்களி நிறச் சீலை. பச்சை ரவிக்கை. உருண்டு திரண்டிருந்த உடலின் எடுப்பைக் கவர்ச்சிகரமாக மூடிக் காட்டிய திரை அது. அலட் சியமாகத் தலைமுடி அள்ளிச் செருகப்பட்டிருந்தது. அவள் நின்று அப்படியும் இப்படியும் பார்த்தாள். வண் டிக்குள்ளே. வெளியே. கதவின் சன்னலில் சாய்ந்து, உடம்பை வளைத்து, தலையை வெளியே நீட்டி நோக்கி னாள். அப்போது அவள் உடல் பகுதிகள் அருமையான காட்சிகள் ஆயின. நிமிர்ந்து நின்று பார்க்கையில் அவள் முகமும் வசீகரமாகத்தான் இருந்தது. - அவள் கண்களில் ஒரு தனிக் கவர்ச்சி. அகன்ற, பெரிய மதமதர்த்த விழிகள். குறுகுறுக்கும் பார்வை, வலைவீசும் மாயா விழிகள். கவ்விப் பற்றும் உணர்ச்சிக் கண்கள். வெற். றிலை சுவைத்திருந்த உதடுகள் ரத்தச் செந்நிறம் காட்டின. களையான முகத்தில் இவை எடுப்பாக விளங்கின. இருட்டு கவியாத, எனினும் ஒளி அதிகம் பெற்றிராத, அந்த அந்தி வேளையில், அந்தச் சூழலில், அம்முகம் மோகி னித் தன்மை பெற்றதாய்-மனித வடிவுக்கு அப்பாற்பட்ட ஒரு வனப்பு ஏற்ற மாயத் தோற்றமாய்-இலங்கியது. அவளையே பார்க்க வேண்டும் என்ற உள்ளத் துடிப்பு அவ்னுக்கு. அவன் அப்படிப் பார்த்ததைப் பார்த்த அவள் முறுவல் விளையாடும் முகத்தோடு, ஜீவதாயம் ஊறும் கண் களால் அவனை உற்று நோக்கினாள்.