பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 64 அப்போதுதான் அவன் உடல் சிலிர்த்தது. உள்ள்த்தில் ஒரு உதைப்பு. இவள் பெண் அல்ல; அமானுஷ்யக் கதை களில் படித்திருப்பது போல்-பாட்டிமார்கள் ச்ொன்ன நாட் டுப்புறக் கதைகளில் வருவது போல-ஒரு பேயாக, பெண் வடிவத்தில் நடமாடும் கொடிய சக்தியாக இருக்கும் என் றொரு நினைப்பு அவனுள் கிளர்ந்தது. இருளும் ஒளியும் முயங்கும்போது, குறுகுறு பார்வை யோடு உற்று நோக்கிய அவள் விழிகளில் ஒரு அமானுஷ்ய மினுமினுப்பு சுடரிடுவதாக அவனுக்குப்பட்டது. அந்த எண் ணம் மன அரிப்பு உண்டாக்கியது. அவன் உடலில் அச்சம் ஊர்ந்தது. அவன் உள்ளத்தில் இருண்ட நிழல்கள் ஆடின. நிச்சயமான எதிர்காலச் சாயைகள். ... ரயில் ஒடி ஒடி, பெரிய ஜங்ஷனை அடைகிறது. அவன் இறங்கி நட்க்கிறான். அவன் பின்னால் அவளும் தொடர்கி றாள். அவ்வப்போது பொல்லாத பார்வை பார்த்துக் கொண்டு, கிளுக்குச் சிரிப்பு சிந்தியவாறு. அந்த ரஸ்தாவில் இருள் மண்டிய பகுதிகள், கரிருள் கப்பிய பெருமரத்து அடிகள், நிறைய உண்டு. அது போன்ற ஒரு இருட்டுப் பந்தலில், அவள் தன் சக்தியை காட்டுகிறாள். அவன் ரத்தம் கக்கிச் செத்து விழுகிறான்... கைலாசம் இவற்றை எல்லாம் தெளிவாகக் காண்கிறான். மூக்கிலும் ரத்தம் வழிய, விழிகள் பயத்தினால் பிதுங்கி நிற்க அவன் கோரப் பிணமாய் கோணிக் கிடப்பதை அவனே நன் றாகப் பார்க்கிறான். அவன் உடலில் ஒரு விதிர் விதிர்ப்பு. வேர்வை பொடித்து நிற்கிறது. பயம் அவனை ஆட் கொள் கிறது. தத்ரூபமான அந்த தரிசனத்தினால் உலுக்கப் பெற்று அலறிவிடக் கூடியவன்தான். நல்ல வேளை. அப்ப்டி நட்க்க வில்லை! -