பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii 1991ல், இந்தியா டுடே (பேரிழப்பு), சோவி யத் நாடு (உதவாக்கரை), சுபமங்களா (சந்தோ வடிங்கள்) இதழ்களில் பிரசுரம் பெற்ற கதைகள் மிக அதிகமான கவனிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றன. அதே போல, ஒவ்வொரு கதையும், அதது வெளிவந்த காலத்தில், விசேஷமான கவனிப் பையும் பெற்றுள்ளன. - இக் கதைகளை வெளியிட்டு, என்னைக்கவுர வித்த அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வல்லிக்கண்ணன் கதைகளில் தேர்ந்தெடுத்து ஒரு சில கதைகளாவது புத்தகமாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு, உற்சாகத்துடன் முயற்சிகள் மேற்கொண்ட என் இனிய நண்பர்கள் நெய்வேலி மு. இராமலிங்கம் மீனாட்சிபேட்டை கு றி ஞ் சி வேலன் ஆகியோருக்கு என் நன்றி உரியது. இக்கதைகளைத் தொகுத்து நல்ல முறையில் புத்தகமாக வெளியிடும் குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகத்திற்கும், நண்பர் சு. சம்பந்தன் அவர் களுக்கும் நன்றி. இத்தொகுப்பு அச்சாகி வருவதில் அதிக ஆர்வ மும் அக்கறையும் காட்டிய ஜென்னிராம் பிரஸ் நண்பர், புதிய நம்பிக்கை ஆசிரியர் பொன்விஜய னுக்கும் என் அன்பும் நன்றியும் உண்டு. 10, வள்ளலார் பிளாட்ஸ், புதுத்தெரு, லாயிட்ஸ் ரோடு, வல்லிக்கண்ணன், சென்னை-600 005.