உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 நிலைக்க முடியாதபடி வடவர் நுழைவு தமிழைத் தேய்த் தது. பிற்காலத்தில், மேலும் தேய்ந்து வேங்கடத்தோடு ஒடுங்கும்படி, தமிழ் மொழியிலிருந்தே புதுமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை பிறக் கும்படி வடமொழி தமிழையே பிளந்தது. காலப்போக்கு. நெடுந்தொலைவு, மக்கள் தொடர்பின்மை ஆகியவற்றால் ஒரு மொழி-பலமொழி கிளை இடந்தர நேரும் எனினும் அவை தாய் மொழியினின்றும் அதிகம் விலகிச் செல்வ தில்லை. ஆனால் தமிழினின்றும் பிறந்த மொழிகளோ வடமொழித் தொடர்பால் அதிகம் விலக நேர்ந்தன. அவை தமிழொடு கொண்டுள்ள மூலத்தொடர்பு விளங் கினும், வடமொழியின் சார்பாகவே வளர்க்கப்பட்ட தால், தமிழொடு மாறுபடும் நிலை பெற்றுள்ளன. எனினும் அம்மொழி பேசும் மக்களின் பண்பாடுகள் இன்றும் மாறிவிடவில்லை. அப்பண்பாட்டு உணர்ச்சி,- திராவிடமொழி, கலை நாகரிக அறிவுடையார் பலரும் அம்மொழிகளின் பழைய வடிவையே காக்க விழைகின் றனர். மேலும் மேலும் வடமொழி ஆதிக்கம் வளருவதை யும் தடுக்க முயற்சிக்கின்றனர். பழைய கன்னடம், தொல் மலையாளம், முன்னாள் தெலுங்கு - ஆகியவற்றைக் கைக்கொண்டு வளர்க்கவும் முயற்சிகள் உள்ளன.. இவ்வாறு, அகத்தியர் காலம் முதலாகவே வடவர் மொழியும் கொள்கைகளும், தமிழர் கலையும் வாழ்வும் அழி யக்காரணமாகி வந்துள்ளதையும் அதைத் தடுக்கும் தற் காப்பு முயற்சிகள் பல தொல்காப்பியர் காலம் முதலாகத் தோன்றியுள்ளதையும் நாம் காண்கிறோம். எனினும் அம் முயற்சிகள் முழு அளவு வெற்றி பெறக்கூடவில்லை. இடைக்காலத்தில், தமிழ் இலக்கிய இலக்கணங் களின் பெருமைகூட ஆரியத்தோடு அதற்குள்ள தொடர் பாலேயே அறுதியிடப்படும் அளவுக்கு இழிதகவு விளைந் தது. ஆனால், இயற்கை நியதியால் ஆரியம் இறந்த மொழியாயிற்று. தமிழின் அடிப்படைகளை நேராகத் தாக்கித் தகர்க்க அதனால் இயலவில்லை. தம்மொழி வழக் கின்றி இறப்பினுங்கூட ஆரியர் அதைக் கருவியாகக்