உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கொண்டே, தமிழை அடிமைப்படுத்த, தனித்து இயங் காது முடக்கத் திட்டமிட்டனர். அதற்கு ஒரு படியே மணிப்பிரவாள நடை. மணிப்பிரவாள நடையோ, தமிழர் செவிக்கு வெறுப்பை விளைவிப்பதாயிற்று. நற்றமிழின் இன்னோசை யாம் இசையினை நுகர்ந்த மக்கள், ஏனோ வேற்றுமொழிக் கலப்பால் காது குடையும் வெற்றோசையைக் கேட்க விரும்புவர் ?. எனவே அந்நடை செல்வாக்குப் பெற வில்லை. மேலும், மதமாறுபாட்டாலும் ஏற்கப்படாது போயிற்று. எப்படியோ தமிழ்நாடு அதன் பிடியில் சிக்குற வில்லை. வட ஆரியரோ, தமிழ் சொற்களுக்குப் பதிலாக மொழிச் சொற்களைப் புகுத்துவதிலும், தமிழ் நெடுங் கணக்கில் வட வெழுத்துக்களுக்கு இடந்தேடுவதிலும், நற்றமிழ்ச் சொற்கள் பலவற்றையும் வட சொற்கள் என திரித்து வழங்குவதிலும் ஈடுபட்டுத் தமிழ்மொழி என்ற எண்ணமே ஏற்படா தபடிச் செய்வதற்கு விடாது முயற் சிப்பாராயினர். இன்றும் அத்திருப்பணி ஓய்ந்தபாடில்லை. C வடவர் கொள்கையாலும், தர்மத்தாலும் புகுந்த மூட நம்பிக்கைகளும், சாதி சமயச்சடங்குகளும் தமிழகத் தையே 'செல்லென' அரித்தன. இராமபாணமாக த் துளைத்தன. அவைகளும் ஆதிநாள் முதலாகவே, மறுக் கப்பட்டு வந்துள்ளன. அரக்கர்கள் வேள்வியை - யாகத்தைத் தடுத்தனர்; வேள்வியை-யாகத்தைத் சுராபானம்,- சோமரசம் பருக மறுத்தனர், என்று புராண இதிகாசங்களே உரைக்கின்றன. சங்க இலக்கியங்களில் ஆரியருக்கே உரிய சில பழக்க வழக்கங்கள் தனித்தே சுட்டப்படுகின்றன. தமிழர் வாழ்க்கை அறமாகிய திருக் குறளில், பிறப்பினாலாகிய சாதியும், வேள்வியும் சூதும், கள்ளும் பிற இழிவழக்குகளும் மறுக்கப்படுகின்றன. திரு மூலர் திருமந்திரம் ஆரியர் தம் மாயவாதக் கருத்துக் களை வீழ்த்துகின்றது. சித்தர் பாட்டுக்கள் ஆரியச் சடங்கு முறைகளை, புரோகித உயர்வை வெறுத்து மொழிகின்றன. - 1