தாகப் புலனாகத் 20 தொடங்கியது. அந்நிய ஆதிக்கத் தீமையினின்றும் விளைந்த நன்மையாயிற்று அது. ஆங்கிலேயர் ஆட்சித் தொடர்பாலேயே, விஞ்ஞான வளர்ச்சியின் பயன் கிடைத்தது இந்தியாவிற்கு. அதனால் மதவெறியில் மூழ்கிக் கிடந்த பொதுமக்களுங்கூட ஓரளவு தெளிவு பெற வாய்ப்புக்கள் ஏற்பட்டன. இங்கு வந்து சேர்ந்த பாதிரிமார்களின் தொண்டு தமிழ்மொழியின் பெருமையை உலகுணரச் செய்யக் காரண மாயிற்று. அதனால் தமிழரின் மதிப்பும் சிறிது சிறிதாக உயரத்தொடங்கியது. மேல் நாட்டார் கண்டு பிடித்த அச்சுப்பொறியின் துணையால், பழந்தமிழ் பழந்தமிழ் ஏடுகள் ஏடுகள் பல வெளிவரலாயின. சென்ற நூற்றாண்டில், பாதிரிமார் களாலும், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலராலும் தமிழ் உரை நடை நூல்கள் இயற்றப்படலாயின. அவை பொது மக்களின் தமிழ் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்தன. தமிழ் நூல்கள் சிலவும், திருக்குறள் அறமும் ஆங்கிலம் முதலிய மேல் நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. அதனால் தமிழின் புகழ் ஓங்கிற்று. டாக்டர் கால்டுவெல் பாதிரியார், தமிழ் மொழியை, மொழிநூல் முறைப்படி ஆராய்ந்து, திராவிடக்குழு மொழி களின் தனிச்சிறப்புக்களையெல்லாம் தமது ஒப்பிலக்கணத் தால் நிலைநாட்டினார். தமிழ்மொழி (மதிப்பு) தலை நிமிர்ந்தது. மேல் நாட்டார் பலர், இந்தியத் துணைக்கண்டத்தின் முன்னாள் வரலாற்றை ஆராய முற்பட்டனர். பெரும் பாலும் அவர்களது கருத்து வடநாட்டிலேயே பதியலா யிற்று. வடமொழிக்கு அவர்களிடம் ஏற்பட்ட செல்வாக்கு, வடமொழி தடையின்றி வளர இடமாக இருந்த வடநாட் டுக்குப் பெருமையளித்தது. இந்திய மொழிகளில், வட மொழியை மட்டுமே கற்றிருந்தமை, வரலா று எழுதத தொடங்கிய வர்களை யெல்லாம், வடநாட்டிற்கே முக்கியத் துவம் அளிக்கச் செய்துவிட்டது. வரலாற்று ஏடுகளில் தென்னாடு மாற்றாந்தாய்ப் பிள்ளையாகவே கைவிடப் பட்டது. முற்காலத்தில் கடல் கொண்டழிந்த தென்னாடு, க
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/21
Appearance