உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 பிற்காலத்தில் ஆரிய ஆதிக்க வெள்ளத்தில் அமிழ்ந்த தென்னாடு, தற்காலத்தில் வரலாற்று வெள்ளத்தாலும் மறைக்கப்பட்டது. ஆயிரம் பக்கங்கொண்ட இந்திய வர லாற்று ஏட்டில் ஒருபத்து இருபது பக்கங்களே தென் னாட்டைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும், அதுவும் சிறப்பிப்ப தாக அமையாது. 66 இந்நிலையைக் கண்ணுற்ற, ஸ்மித் என்ற வரலா ற்று நூல் ஆசிரியரே, முதன் முதலாக, இந்தியத் துணைக் கண்டத்தின் உண்மையான பழைய வரலாற்றை அறிய வேண்டுமானால், வரலாற்று ஆசிரியர்களின் ஆராய்ச்சி, கங்கைக்கரையில் தொடங்கப்படுவதற்குப் பதில் காவிரிக் கரையில் தொடங்கப்படவேண்டும்" என்ற கருத்தை வெளியிடலானார். ஆரியர் வருகைக்கு முன்பாகவே வாழ்ந்த திராவிடரின் வரலாறு முக்கியத்துவம் அளிக்கப் படவேண்டும் என்ற கருத்து அதுமுதல் வலியுற லாயிற்று. திராவிடர் பற்றிய உண்மைகள் பல வெளிவரலாயின. அரசாங்கத்தின் புதைபொருள் இலாக்கா, சிற்பக்கலை ஆராய்ச்சி நிலையம் முதலியவற்றின் பணியினாலும், திராவிட நாகரிகத்தின் தொன்மையும், தென்னாட்டுச் சிற் பக்கலையின் தனித்தன்மையும் வளர்ச்சியும் விளக்க முறலாயின. திராவிட மக்களின் முகத்தோற்றத்தில், வடிவமைப்பில், குஞ்சியழகில், வாழ்க்கை முறையில், ஒழுக் கப்பற்றில், மொழிவழியில் இலக்கிய நெறியில் உள்ள சிறப்பியல்புகளெல்லாம் ஆராய்ச்சி ஒளியால் தெளிவு பெறத் தொடங்கின. அவை ஆரியத் தொடர்பாலும், கலப்பாலும், ஆதிக்கத்தாலும், புதையுண்ட பொருளாக, தடையுண்ட நீராக, மறைபட்ட ஒளியாக, முடங்கிக் கிடப்ப தையும் காண நேர்ந்தது. உண்மையை உரைப்பதில் ஆர்வ முடையோர் அதை வெளியிட்டனர். வேறு நோக்கி னர், வேறுமுறையாகவே நடந்துகொண்டனர். என் திராவிடத்தின் வரலாறு முற்றும் உருப்பெறாவிடினும் உண்மைகள் பல வெளிப்பட்டதால், தமிழர் மேலும், மேலும் தம்மை உணரலாயினர். 2 றாலும்